»   »  ஓட்டுப் பாட்டுக்காக சிம்புக்கு சில மீம்ஸ்கள்... ஆனால் கலாய்த்து அல்ல!

ஓட்டுப் பாட்டுக்காக சிம்புக்கு சில மீம்ஸ்கள்... ஆனால் கலாய்த்து அல்ல!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பீப் பாடலில் பெயரைக் கெடுத்துக் கொண்ட சிம்பு தற்போது வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தி, ஓட்டுப் பாடல் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

சிம்புவுடன் இணைந்து விடிவி கணேஷ் பாடியிருக்கும் இப்பாடல் இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் சிம்பு வெளியிட்ட ஓட்டுப் பாட்டுக்கு மீம்ஸ் போட்டே தீருவோம் என நெட்டிசன்கள் வழக்கம்போல, தங்களது 'கடமையை' ஆற்றியுள்ளனர். ஆனால் இவை சிம்புவை கலாய்ப்பவை அல்ல.. பாராட்டுபவை.

அதிலிருந்து சில மீம்ஸ்களை பார்க்கலாம்.

அன்பானவன்

அன்பானவன் அசராதவன் அசத்தியவன் என சிம்புவின் படத் தலைப்பை ஓட்டுப்பாடலுடன் கோர்த்து விட்டிருக்கிறார் ஜெயா.

ஓட்டுப்பாடல்

ஓட்டுப்பாடல் மூலம் சிம்புவுக்கு எதிராக இருந்த சங்கங்கள், எதிரிகளை அவர் வென்றுவிட்டார் என சிம்புவுக்கு ஆதரவாக மீம்ஸ் போட்டிருக்கிறார் தரணி.

பன்முக திறமை

கவிஞர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர் என சிம்புவின் சகலகலா வல்லவன் திறமையை, சூர்யாவின் வாட்ச் மெக்கானிக் வசனத்துடன் ஒப்பிட்டிருக்கிறார் மதன்.

நாங்க தப்பு

நாங்க தப்பு பண்றவங்க இல்ல தப்பத் தட்டிக் கேட்கறவங்க என 'தலைவா' விஜய் வசனத்தை பதிவிட்டிருக்கிறார் நவீன்.

English summary
Simbu's Vote Song Released Yesterday - Related Memes.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil