இதை மட்டும் பண்ணுங்க...பெண் குழந்தைகளுக்கு பிரச்சனையே வராது...பெற்றோருக்கு சிம்பு அட்வைஸ்
சென்னை : சமீப காலமாக நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், அதனால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும், தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு வந்தாலும் இன்றளவும் அது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறதே தவிர, கொஞ்சமும் குறைந்தபாடில்லை. இப்படியெல்லாம் கூட நடந்து கொள்வார்களா என அனைவரும் அதிர்ச்சி அடையும் அளவிற்கு கொடூரமான பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கே பெற்றோர்கள் பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுக்கவும் பல சினிமாக்களும் எடுக்கப்பட்டு விட்டன. இது போன்ற குற்றங்களுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

வைரலாகும் சிம்பு வீடியோ
இந்நிலையில் பாலியல் குற்றங்களை தடுப்பது பற்றி விழா ஒன்றில் சிம்பு பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது. சிம்புவின் இந்த பேச்சிற்கு பாராட்டுக்களும், ஆதரவுகளும் குவிந்து வருகிறது.

விருப்பமில்லாத பெண்ணை தொடுவது
அந்த வீடியோவில் சிம்பு, விருப்பமில்லாத ஒரு பொண்ணை தொடுவது உங்க அம்மாவை தொடுவதற்கு சமம் என எல்லா தாயும் ஒவ்வொரு நாளும் உங்கள் பிள்ளைகளிடம் சொல்லி பாருங்கள். ஒருத்தன், ஒரு பொண்ணை தொடுறானான்னு பாருங்கள். தொடவே மாட்டான். ஆனால் இப்படி ஒரு விஷயத்தை பிள்ளையிடம் பேசவே அறுவறுப்பாக இருக்கும்.

எவன் கொடுக்குறது சர்ட்டிஃபிகேட்
அப்படி நினைக்காதீர்கள். உங்க பிள்ளை. அங்கு பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணையும் உங்கள் பொண்ணாக நினையுங்கள். நினைத்து பேசுங்கள். சொல்லுங்கள். நம்ம பிள்ளைகளுக்கு நாம தான் சொல்லி கொடுக்கனும். இங்கு பிறப்பவர்கள் யாரும் கெட்டவனும் கிடையாது, நல்லவனும் கிடையாது. எவன் கொடுக்குகிறது இங்க நல்லவன், கெட்டவன் என சர்ட்டிஃபிகேட். வர சொல்லுங்க. எவனுமே கிடையாது.

ஒற்றுமையா இருங்க
எல்லாமே நாமாக உருவாக்கிக் கொள்வது தான். இது போல் ஒவ்வொரு குழந்தையின் உயிர் போவது கஷ்டமாக இருக்கு. குழந்தைகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள் என்பதை தடுக்க பல பேர் இருக்கிறார்கள். நாம் அனைவரும் இவர் ரசிகர், அவர் ரசிகர், இந்த ஜாதி, அந்த ஜாதி, கீழ இருக்கவன், மேல இருக்கவன் எல்லாத்தையும் விட்டுட்டு, தயவு செய்து அனைவரும் ஒற்றுமையாக இருங்கள் என்பதை தான் நான் கேட்டு கொள்கிறேன். எப்போதும் கேட்டுக் கொள்வது அதை தான் என சிம்பு பேசி உள்ளார்.

மாஸ் பேச்சு
சிம்புவின் இந்த மாஸான பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போதைய நிகழ்வுகளுக்கு ஏற்றது போல், பெற்றோர்களுக்கு அட்வைஸ் வழங்கும் விதமாக சிம்பு பேசிய இந்த பேச்சு அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











