»   »  பாக்ஸ் ஆபீஸில் இன்னும் 'நின்று ஆடும்' வாலு!

பாக்ஸ் ஆபீஸில் இன்னும் 'நின்று ஆடும்' வாலு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஆந்திரப் படங்களுக்கு எப்போதுமே ஒரு வரவேற்பு இருக்கும், இதனைக் கருத்தில் கொண்டு தெலுங்கு நடிகர்கள் தாங்கள் நடித்த படங்களை சென்னையில் வெளியிடுவது வழக்கம்.

இதே போன்று கடந்த வாரம் தெலுங்கின் மாஸ் மகாராஜா என்று போற்றப்படும் ரவிதேஜா நடித்த கிக் 2 திரைப்படம், சென்னையில் உள்ள திரையரங்குகளில் வெளியானது.


ஆனால் வழக்கத்திற்கு மாறாக ரவிதேஜாவின் படம் வசூலில் பின்தங்கியுள்ளது, கிக்2 வை ஓரங்கட்டி வசூலில் தமிழ்ப் படங்களே முன்னிலை வகிக்கின்றன.


சென்னை பாக்ஸ் ஆபிசில் எந்தெந்தப் படங்கள் எவ்வளவு வசூல் செய்திருக்கின்றன, யார் முன்னிலை வகிக்கின்றனர் போன்ற விவரங்களை கீழே பார்ப்போம்.


களத்தில் கம்பீரம் குறையாத வாலு

களத்தில் கம்பீரம் குறையாத வாலு

சிம்புவின் வாலு வெளியாகி 2 வாரம் கழித்தும் கூட வசூலில் சற்றும் சோடை போகவில்லை, ஆர்யாவின் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்திற்கு பலத்த போட்டியாக மாறியிருக்கின்றது வாலு. கடந்த வாரம் சென்னையில் உள்ள திரையரங்குகளில் 177 காட்சிகள் திரையிடப்பட்டு சுமார் 54.70 லட்சங்களை அள்ளியிருக்கிறது வாலு. படம் வெளியான இந்த 10 நாட்களில் சென்னையில் மட்டும் இதுவரை சுமார் 2.08 கோடிகளை வசூலித்து இருக்கிறது வாலு திரைப்படம்.
வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க

ஆர்யாவின் நடிப்பில் வெளியான வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க திரைப்படம் கடந்த வாரம் சென்னையில் உள்ள திரையரங்குகளில் 165 காட்சிகள் திரையிடப்பட்டு 54.87 லட்சங்களை வசூலித்து இருக்கிறது. 10 நாட்களில் சென்னையில் மட்டும் 2.05 கோடிகளை அள்ளியிருக்கிறது.


கிக் 2

கிக் 2

அக்கட தேசத்தில் வசூல் சக்கரவர்த்தியாக மாறிய ரவிதேஜா, சென்னையில் பின்தங்கி விட்டார். இதுவரை 63காட்சிகள் சென்னையில் திரையிடப் பட்டு இருக்கின்றன, மொத்தம் இந்த 3 நாட்களில் 14.55 லட்சங்களை வசூலித்து இருக்கிறது படம்.பாகுபலி மற்றும் ஸ்ரீமந்துடு படங்களைப் போன்று தமிழில் டப் செய்து வெளியிடாததே வசூல் சரிவிற்கு காரணம் என்று கூறுகின்றனர்.


இன்னமும் களத்தில் நிற்கும் பாகுபலி

இன்னமும் களத்தில் நிற்கும் பாகுபலி

பாகுபலி வெளியாகி 45 நாட்கள் ஆகின்றன, ஆனால் இன்னமும் களத்தில் நின்று புதிய படங்களுக்கு போட்டியைக் கொடுக்கிறது ராஜமௌலியின் பாகுபலி. கடந்த வாரம் 48 காட்சிகள் திரையிடப்பட்ட பாகுபலி சுமார் 9.29 லட்சங்களை இதுவரை வசூலித்துள்ளது.தமிழ் +தெலுங்கு 2 மொழிகளிலும் 7.92 கோடிகளை இதுவரை இந்த மாதத்தில் படம் வசூலித்து இருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


வீரபாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன்

காலத்தால் அழியாத காவியமான வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வசூலில் சோடை போகவில்லை, திரையரங்குகளில் வெறும் 39 காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்ட இந்தக் காவியம் இதுவரை 5.53 லட்சங்களை வசூலித்து இருக்கிறது.


Read more about: vaalu, simbu, box office, வாலு
English summary
Simbu's Starring Vaalu, Leading in Chennai Box Office.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil