முதல்வருக்கு மனம் நெகிழ்ந்து நன்றி சொன்ன சிம்பு..ஏன் தெரியுமா?
சென்னை : பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிம்பு முதல்வர் முக ஸ்டாலின் மனம் நெகிழ்ந்து நன்றி சொன்னார்.
Recommended Video
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் டி.ராஜேந்தர். அவருக்கு கடந்த மாதம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயிற்றில் லேசான ரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து, உயர் சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தந்தையில் சிகிச்சைக்காக படப்பிடிப்பு பணிகளை நிறுத்திவிட்டு நடிகர் சிம்பு 10 நாட்களுக்கு முன்பே அமெரிக்கா சென்று சிகிச்சைக்கான பணிகனை கவனித்துக் கொண்டார். இதையடுத்து டி ராஜேந்தருக்கு சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தவுடன் சிம்பு சென்னை திரும்பினார்.
சிகிச்சை முடிந்து சில நாட்களாக அமெரிக்காவில் ஓய்வில் இருந்த டி ராஜேந்தர் குடும்பத்தினருடன் நாளை அதிகாலை 2 மணியளவில் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டி ஆரின் மனைவி உஷா, இளைய மகன் குறளரசன், மகள் இலக்கியா, மருமகன் அபிலாஷ், பேரன் ஜேசன் ஆகியோரும் நாளை சென்னை திரும்புகின்றனர்.
இந்நிலையில், பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பேசிய சிம்பு, அப்பாவுக்கு உடல் நிலை சரி இல்லாத போது உதவி செய்த முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு மிகவும் நன்றி. அதேபோல உதயநிதி ஸ்டாலினும் அவ்வப்போது என்னை தொடர்பு கொண்டு அப்பாவின் உடல் நலம் குறித்து விசாரித்தார் அவருக்கும் என் மனமார்ந்த நன்றி என்றார்.


Click it and Unblock the Notifications











