சிம்புவின் அடுத்த வில்லன் இவர் தானா... எந்த படத்தில் தெரியுமா ?

சென்னை : சிம்பு நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க போகும் அந்த பிரபல நடிகர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அப்போ படம் வேற லெவலில் இருக்கும் என சிம்பு ரசிகர்கள் குஷியாகி விட்டனர்.

சிம்பு நடித்த மாநாடு படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. 25வது நாளில் 100 கோடி கிளப்பில் இணைந்த மாநாடு இன்று 100வது நாளையும் எட்டி உள்ளது. மாநாடு படத்தில் சிம்புவிற்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா பின்னி பெடலெடுத்திருப்பார். இதனால் சிம்பு படங்களில் வரும் வில்லன் கேரக்டர்களுக்கும் தற்போது மவுசு கூடி உள்ளது.

சிம்புவின் அடுத்தடுத்த படங்கள்

சிம்புவின் அடுத்தடுத்த படங்கள்

மாநாடு படத்தை தொடர்ந்து வரிசையாக சிம்பு நடிக்கும் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. ஹன்சிகாவுடன் மஹா, கெளதம் மேனனின் வெந்து தணிந்தது காடு, ஓபிலி என்.கிருஷ்ணாவின் பத்து தல, கோகுலின் கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் வெந்து தணிந்தது காடு பட ஷுட்டிங் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது.

 மார்ச் மாதத்தில் இரண்டா

மார்ச் மாதத்தில் இரண்டா

மார்ச் மாதத்தில் பத்து தல படத்தின் ஷுட்டிங்கை சிம்பு துவங்க போகிறார். அதில் அவர் நடிக்க வேண்டிய போர்ஷன்களை முடித்த பிறகு கோகுல் இயக்கும் கொரோனா குமார் படத்தின் வேலைகளை துவக்க போகிறார். இது கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.

சிம்புவிற்கு வில்லன் இவரா

சிம்புவிற்கு வில்லன் இவரா

கொரோனா குமார் படத்தில் டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தான் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க போகிறார். லேட்டஸ்ட் தகவலாக, இந்த படத்தில் சிம்புவிற்கு வில்லனாக நடிக்க ஃபகத் ஃபாசிலிடம் கேட்கப்பட்டுள்ளதாம். அவருக்கு இந்த கேரக்டர் மிகவும் பிடித்து விட்டதால், உடனே ஓகே சொல்லி விட்டாராம். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாம்.

Recommended Video

M.K Stalin , Simbu, Sivakarthikeyan wishes | Anbu Chezhiyan Daughter Marriage | Filmibeat Tamil
டாப் ஹீரோக்களின் வில்லன்

டாப் ஹீரோக்களின் வில்லன்

ஃபகத் ஃபாசில் வரிசையாக டாப் ஹீரோக்கள் அனைவருக்கும் வில்லனாக நடித்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்த ஃபகத் ஃபாசில், தொடர்ந்து மொட்டையடித்து புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுக்கு வில்லனாக நடித்தார். பிறகு விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்தார். தற்போது சிம்புவுக்கு வில்லனாக நடிக்க போகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X