»   »  தயாரிப்பாளரானார் தீபக் பாகா.. மனைவி சிம்ரனை வைத்து படமெடுக்கிறார்!

தயாரிப்பாளரானார் தீபக் பாகா.. மனைவி சிம்ரனை வைத்து படமெடுக்கிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்னாள் கனவுக் கன்னி, இந்நாள் குணச்சித்திர நடிகை சிம்ரனின் கணவர் தீபக் பாகா திரைப்படத் தயாரிப்பாளராக மாறினார்.

மனைவி சிம்ரனை வைத்து அவர் புதிய படம் தயாரிக்கிறார். இதனை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Simran's husband turns as producer

திருமணத்துக்குப் பிறகு ஒதுங்கியிருந்த சிம்ரன், இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சிம்ரனின் கணவர் தீபக் பாகா, சின்னத்திரையில் பல வெற்றிகரமான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியுள்ளார். இவர் தற்போது வெள்ளித் திரையிலும் தனது காலடியை பதித்துள்ளார்.

‘சிம்ரன் & சன்ஸ்' என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார். இந்நிலையில், இவருடைய முதல் தயாரிப்பில் உருவாகும் படத்தை கௌரிசங்கர் என்பவர் இயக்கவுள்ளார்.

Simran's husband turns as producer

கௌரிசங்கர், பல முன்னணி நிறுவனங்களுக்கு பிரபல நட்சத்திரங்களை வைத்து நிறைய விளம்பரப் படங்களை இயக்கியவர். இவர் இயக்கும் அந்த புதிய படத்தில் சிம்ரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும், இந்த படத்தின் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளார்கள்.

Read more about: simran சிம்ரன்
English summary
Actress Simran's husband Deepak Paga has launched a production company Simran & Sons.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil