»   »  சிம்ரனின் திருமணம் முடிந்தது

சிம்ரனின் திருமணம் முடிந்தது

Subscribe to Oneindia Tamil

மும்பையில் பஞ்சாபி முறைப்படி நேற்றிரவு சிம்ரன்- தீபக் பங்கா திருமணம் நடந்தது. தமிழக சினிமா துறையைச்சேர்ந்த யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை.

சிம்ரன் பஞ்சாபி மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருமணம் பஞ்சாபி முறைப்படி விமரிசையாக நடந்தது.

பஞ்சாபி வழக்கப்படி திருமணம் நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்பிருந்து மணமகள் வீட்டை விட்டுவெளியே வரக்கூடாது. இதனால் சிம்ரன் கடந்த 10 நாட்களாக வீட்டிலேயே இருந்தார்.

நேற்றிரவு 8 மணிக்கு சிம்ரனும், தீபக்கும் காரில் ஊர்வலமாக மும்பை அந்தேரி, வார்சாவில் உள்ள சிம்ரன்வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தாரினா மகாலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

அதன்பிறகு நடந்த திருமண சடங்குகளைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு இருவரும் மணமேடைக்குஅழைத்து வரப்பட்டனர். திருமணத்தில் சிம்ரனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில்கலந்து கொண்டனர். தமிழக சினிமா முக்கியஸ்தர்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை.

விருந்தில் வட இந்திய, தென் இந்திய மற்றும் சைனீஸ் உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

முன்னதாக இந்தத் திருமணத்தில் ஜோதிகா, குஷ்பு, விஜய்காந்த், சரத்குமார் ஆகியோர் பங்கேற்பர் என்றுகூறப்பட்டது. ஆனால் அவர்களும் இதில் கலந்து கொள்வதைத் தவிர்த்துவிட்டனர்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil