»   »  சிங்கம் 4 நிச்சயம் வரும் ஆனால்...: சூர்யா

சிங்கம் 4 நிச்சயம் வரும் ஆனால்...: சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிங்கம் 4 படம் நிச்சயம் வரும் என்று இயக்குனர் ஹரியும், சூர்யாவும் தெரிவித்துள்ளனர்.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் 3 படம் கடந்த வியாழக்கிழமை ரிலீஸானது. படம் வெளியான 6 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சிங்கம் 4 படம் பற்றி ஹரி மற்றும் சூர்யா பேசியுள்ளனர்.

சிங்கம் 4

சிங்கம் 4

சிங்கம் 4 படம் நிச்சயம் வரும். ஆனால் அதற்கு முன்பு நானும், ஹரியும் சேர்ந்து வேறு படம் பண்ண உள்ளோம். 5 ஆண்டுகள் கழித்து சிங்கம் 4 படம் பண்ணுவோம் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

ஹரி

ஹரி

சிங்கம் 4 படம் வர 5 அல்லது 6 ஆண்டுகள் ஆகும் என்று நினைக்கிறேன். தற்போது நானும், சூர்யாவும் சேர்ந்து வேறு படம் பண்ண திட்டமிட்டுள்ளோம் என்கிறார் ஹரி.

சாமி 2

சாமி 2

சிங்கம் 3 படத்தை அடுத்து விக்ரமை வைத்து சாமி 2 படத்தை எடுக்கிறேன். அதன் பிறகு மீண்டும் சூர்யாவுடன் சேர்ந்து படம் பண்ண உள்ளேன் என ஹரி தெரிவித்துள்ளார்.

சூர்யா

சூர்யா

கடந்த 12 ஆண்டுகளில் நானும், சூர்யாவும் சேர்ந்து 5 படம் பண்ணியுள்ளோம். ஒவ்வொரு படத்திற்கும் 120 நாட்கள் பணியாற்றியுள்ளோம். எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது என்று ஹரி கூறியுள்ளார்.

English summary
Hari and Suriya have decided to do Singam 4 but after five to six years. They want to do another movie before Singam 4.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil