»   »  ட்விட்டரில் சல்மான் கானை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய பிரபல பாடகர்

ட்விட்டரில் சல்மான் கானை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய பிரபல பாடகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சூப்பர் ஸ்டார்கள் யூரி தாக்குதல், பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு, இந்தியர்கள் கொலை ஆகியவை பற்றிய செய்திகளை பார்ப்பது இல்லை என இந்தி பாடகர் அபிஜீத் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

யூரி தாக்குதலை அடுத்து மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வரும் நடிகர், நடிகைகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா எச்சரித்தது. இதையடுத்து பாகிஸ்தான் கலைஞர்கள் அவர்களின் நாட்டிற்கு கிளம்பினர்.

மேலும் பாகிஸ்தான் கலைஞர்கள் நடித்த படங்களை திரையிடவும் ராஜ் தாக்கரே கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சல்மான் கான்

சல்மான் கான்

பாகிஸ்தான் நடிகர், நடிககைள் தீவிரவாதிகள் அல்ல என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார். இதற்கு அவரை கண்டித்து பலரும் ட்வீட் செய்து வருகிறார்கள்.

சூப்பர் ஸ்டார்கள்

யூரி தாக்குதல், பாகிஸ்தான் நடத்தும் துப்பாக்கிச்சூடு, இந்தியர்களை கொலை செய்வது பற்றிய செய்திகளை சூப்பர் ஸ்டார்கள் பார்ப்பது இல்லை. ஏனென்றால் அவர்கள் பாகிஸ்தானியர்களுடன் சேர்ந்து நடிப்பதில் பிசியாக உள்ளனர் என இந்தி பின்னணி பாடகர் அபிஜீத் பட்டார்ச்சார்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஃபவாத் கான்

ஃபவாத் கானாவது அவரது நாடான பாகிஸ்தானுக்கு உண்மையாக உள்ளார். பாலிவுட் நடிகர் சல்மான் கானோ இந்தியாவுக்கு உண்மையாக இருப்பதை அவமானமாக கருதுகிறார் என்கிறார் அபிஜீத்.

கலைஞர்கள்

பணம், பாசம், புகழை அனுபவிப்பது மற்றும் இந்தியாவுக்கு எதிராக இருப்பது தான் பாகிஸ்தான் மற்றும் இந்திய கலைஞர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை என அபிஜீத் ட்விட்டரில் கூறியுள்ளார்.

English summary
Playback singer Abhijeet Bhattacharya blasted Bollywood superstar Salman Khan on twitter.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil