Bigg Boss Tamil 6: ஆரம்பிக்கலாமா.. பிக் பாஸ் சீசன் 6ல் புஷ்பா பட பாடகி கலந்துக்குறாரா?
சென்னை: வரும் அக்டோபர் 2ம் தேதி பிக் பாஸ் சீசன் 6 அட்டகாசமாக கோலாகல துவக்க விழா நிகழ்ச்சியுடன் ஆரம்பம் ஆக உள்ளது.
பிக் பாஸ் சீசன் 6ஐ நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்க போகிறார் என்றும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
இந்நிலையில், போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் காத்துவாக்குல கசியத் தொடங்கி இருக்கின்றன. அப்படி கசிந்துள்ள ஒரு போட்டியாளர் யார் என்பது குறித்து தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

பிக் பாஸ் சீசன் 6
உலகம் முழுவதும் பல பெயர்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பிரதர் என ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சியே இந்தியில் பிக் பாஸ் எனும் பெயரில் 15 சீசன்களையும் தமிழில் 5 சீசன்களையும் இதுவரை வெற்றிகரமாக கடந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் கடந்த 5 பிக் பாஸ் தமிழ் சீசன்களையும் தொகுத்து வழங்கி உள்ளார். ஒரு வாரம் மட்டும் உடல் நலக் குறைவு காரணமாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

பிக் பாஸ் அல்டிமேட்
விஜய் டிவியில் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் அல்டிமேட் எனும் ஓடிடி நிகழ்ச்சி இந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 5 முடிந்ததும் ஆரம்பமானது. அதையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். ஆனால், விக்ரம் படத்தின் வேலைகள் காரணமாக அவரால் அந்த நிகழ்ச்சியை தொடர முடியவில்லை என்று அதிரடியாக விலகினார். புதிய பிக் பாஸாக நடிகர் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மீண்டும் கமல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6க்கு கண்டிப்பாக வருவேன் என்கிற உறுதி மொழியையும் நடிகர் கமல் அப்போது அறிவித்திருந்தார். விஜய் டிவியுடன் நல்ல டைப் அப்பில் இருக்கும் கமல் பிக் பாஸ் சீசன் 6யையும் அவரே தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் அல்டிமேட் சீசன் 2வை சிம்பு தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.

'சின்ன மச்சான்' ராஜலட்சுமி
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் ஏகப்பட்ட குக் வித் கோமாளி பிரபலங்கள் பங்கேற்பார்களா? என்கிற கேள்வி எழுந்து வந்த நிலையில், தற்போது 'சின்ன மச்சான்' பாடலை பாடிய நாட்டுப்புற பின்னணி பாடகி ராஜலட்சுமி கலந்து கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிகளில் ஏகப்பட்ட பாடகர்கள் பங்கேற்றுள்ள நிலையில், இந்த முறை ராஜலட்சுமி அதிரடியாக நுழைந்து அசத்தப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புஷ்பா பாட்டு செம ஹிட்
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இவர் பாடிய "சாமி சாமி" பாடல் பட்டித் தொட்டி எங்கும் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. பெரிய பட்ஜெட் படங்களுக்கு பாடல்களை பாடி வரும் ராஜலட்சுமி 100 நாட்கள் தனது பிசியான ஷெட்யூலை விட்டு விட்டு எப்படி பிக் பாஸ் வீட்டுக்குள் வரப் போகிறார்? அவருக்கு கிராம மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்குமே என்றும் விவாதங்கள் ஆரம்பமாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











