இந்த மாதம் நடக்க இருந்த.. பிரபல பாடகியின் 2 வது திருமணம்.. அடுத்த வருஷம் தள்ளிப் போச்சாமே!

By

ஐதராபாத்: இந்த மாதம் நடக்க இருந்த பிரபல பாடகியின் இரண்டாவது திருமணம் அடுத்த வருடத்துக்கு தள்ளிப் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கில் ஏராளமானப் பாடல்களை பாடியிருப்பவர் சுனிதா. தமிழை விட தெலுங்கில் அதிக பாடல்களை பாடியிருக்கிறார்.

இளையராஜா இசையில் தமிழ், தெலுங்கில் அதிகமான பாடல்களை பாடியுள்ளார் அனிதா.

முதன்முறையாக நெகட்டிவ்

நடிகைகளுக்கு டப்பிங்

நடிகைகளுக்கு டப்பிங்

விஜய்யின் பத்ரி படத்தில் இடம்பெறும், காதல் சொல்வது உட்பட பல பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. டி.வி.நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருக்கும் இவர், சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தும் இருக்கிறார். இவர், பல நடிகைகளுக்கு டப்பிங்கும் பேசி வருகிறார்.

அடிக்கடி வதந்தி

அடிக்கடி வதந்தி

19 வயதிலேயே திருமணம் செய்துகொண்ட சுனிதாவுக்கு மகனும் மகளும் உள்ளனர். பின்னர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொண்டார். இவர் மகள் ஷ்ரேயாவும் பாடகியாக இருக்கிறார். பாடகி சுனிதா பற்றி அடிக்கடி வதந்தி வருவது டோலிவுட்டில் வழக்கம்.

உருக்கமான பதிவு

உருக்கமான பதிவு

அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்றும் அவரை காதலிக்கிறார், இவரைக் காதலிக்கிறார் என்று செய்திகள் வந்துபோகும். இதுபோன்று வந்த வதந்திக்கு உருக்கமான பதிவு ஒன்றை அவர் சில மாதங்களுக்கு முன் போஸ்ட் செய்திருந்தார். அதில் தன்னை பற்றி வதந்தி பரப்ப, வாட்ஸ் அப் குரூப் தொடங்கப்பட்டு இருப்பதாகக் கூறியிருந்தார்.

ராம் வீரபனேனி

ராம் வீரபனேனி

இதற்கிடையே, அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது. அதை முதலில் மறுத்திருந்தார். பின்னர் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படத்தை வெளியிட்டார். தொழிலதிபர் ராம் வீரபனேனி என்பவரை அவர் இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

அற்புதமான நண்பர்

அற்புதமான நண்பர்

இதுபற்றி அவர் கூறும்போது, என் வாழ்க்கையில் அற்புதமான நண்பராகவும் சிறந்த பார்ட்னராகவும் ராம் நுழைந்திருக்கிறார். விரைவில் திருமண பந்தத்துக்குள் இணைய இருக்கிறோம். என் நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி என்று கூறியிருந்தார்.

தள்ளிப் போனது

தள்ளிப் போனது

இவர்கள் வரும் 27 ஆம் தேதி ஐதராபாத்தில் திருமணம் செய்துகொள்ள இருந்தனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் அடுத்த வருடத்துக்கு தள்ளிப் போயிருக்கிறது. அடுத்த வருடம் எப்போது என தேதி முடிவாகவில்லை. திருமணத்துக்குப் பிறகு அவர்கள் புதிய வீட்டில் குடியேற இருப்பதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X