twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2022 பட்டம் -தட்டிச்சென்ற கர்நாடக நடனக்கலைஞர்.. விஜய் பாட்டுக்கு ஆட்டம்

    |

    சென்னை : பெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2022 அழகிப் பட்டத்தை கர்நாடகாவை சேர்ந்த சினி ஷெட்டி வென்றுள்ளார்.

    மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 21 வயதான சினி ஷெட்டி இந்தப் பட்டத்தை வென்றுள்ளார்.

    இந்தப் போட்டியில் இரண்டாவது இடத்தை ரூபால் ஷெகாவத்தும் மூன்றாவது இடத்தை ஷினாதா சவுகானும் பெற்றுள்ளனர்.

    தளபதி 67 அறிவிப்புக்காகதான் வெயிட்டிங்.. வந்தா உடனே சொல்லிடுவேன்.. எதைப்பற்றி சொல்லியிருக்காரு லோகேஷ்!தளபதி 67 அறிவிப்புக்காகதான் வெயிட்டிங்.. வந்தா உடனே சொல்லிடுவேன்.. எதைப்பற்றி சொல்லியிருக்காரு லோகேஷ்!

    பெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2022

    பெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2022

    ஆண்டுதோறும் பெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2022 பட்டத்திற்கான போட்டி நடைபெற்று வருகிறது. திறமை, அழகு உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பலகட்டங்களில் நடத்தப்படும் இந்தப் போட்டி நேற்றைய தினம் மும்பையில் நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதும் பல மாநிலங்களை சேர்ந்த பல அழகிகள் கலந்துக் கொண்டனர்.

    சிறப்பான நடுவர் குழு

    சிறப்பான நடுவர் குழு

    மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேஹா தூபியா, மலைக்கா அரோரா, டினோ மோரியா, ஆடை வடிவமைப்பாளர்கள் ரோஹித் காந்தி மற்றும் ராகுல் கண்ணா, முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோர் அடங்கிய நடுவர் குழுவினர் வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.

    சினி ஷெட்டி முதலிடம்

    சினி ஷெட்டி முதலிடம்

    பாலிவுட் பிரபலங்களும் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் கர்நாடகாவை சேர்ந்த சினி ஷெட்டி முதலிடத்தை பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை ராஜஸ்தானை சேர்ந்த ரூபால் ஷெகாவத்தும் மூன்றாவது இடத்தை உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷினாதா சவுகானும் பெற்றுள்ளனர்.

    சினி ஷெட்டிக்கு கிரீடம்

    சினி ஷெட்டிக்கு கிரீடம்

    இதனிடையே முதலிடத்தை பெற்ற சினி ஷெட்டிக்கு கடந்த ஆண்டு மிஸ் இந்தியா 2021 பட்டத்தை பெற்ற மானசா வாரணாசி கிரீடத்தை சூட்டினார். 21 வயதான சினி ஷெட்டி கர்நாடகாவை சேர்ந்தவர் என்றாலும் மகாராஷ்டிராவின் மும்பையில் வளர்ந்தவர். நிதித்துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். தற்போது சிஎப்ஏக்கான தொழில்முறை கல்வியை கற்று வருகிறார்.

    பரதநாட்டிய கலைஞர்

    பரதநாட்டிய கலைஞர்

    சினி ஷெட்டி பயிற்சி பெற்ற பரதநாட்டிய கலைஞர். தன்னுடைய 4 வயதில் பரதநாட்டியத்தை இவர் கற்க துவங்கினார். இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் சினி ஷெட்டி அணிந்திருந்த ஆடையை பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் ரோஹித் காந்தி மற்றும் ராகுல் கண்ணா வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Recommended Video

    50 Beds அவரே ready பண்ணாரு ! ஒரு பாட்டுக்கே 3 கோடியா? |Thewarrior|Filmibeat Tamil
    விஜய் பாட்டுக்கு டான்ஸ்

    விஜய் பாட்டுக்கு டான்ஸ்

    இதையடுத்து சினி ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பயணத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த போட்டியின்போது விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கும் அவர் நடனம் ஆடியுள்ளார். பட்டத்தை அவர் வென்றவுடன் அவரது அம்மா அவருக்கு வாழ்த்து தெரிவித்தது உணர்வுபூர்வமாக இருந்தது.

    English summary
    Karnataka's Shini shetty wons Femin miss india 2022 crown
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X