பாலிவுட்டில் எனக்கு நடந்த துரதிர்ஷ்டம்: வருத்தப்பட்ட ஸ்ரீதேவி
Recommended Video

சென்னை: பாலிவுட்டில் தனக்கு நடந்த துரதிர்ஷ்டம் பற்றி ஸ்ரீதேவி ஒரு முறை பேட்டியில் தெரிவித்து வருத்தப்பட்டார்.
தமிழ் திரையுலகில் இருந்து சென்று பாலிவுட்டின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் ஆனவர் ஸ்ரீதேவி. துபாய்க்கு சென்ற இடத்தில் மரணம் அடைந்தார். அவரின் மூத்த மகள் நடிகையாகியுள்ளார்.
இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு பேட்டி ஒன்றில் ஸ்ரீதேவி கூறியிருந்ததாவது,

ஸ்ரீதேவி
என்னை கவர்ச்சி புயலாக மக்கள் பார்ப்பது பிடிக்கவில்லை. யாராவது என்னிடம் வந்து நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்றால் நான் ரியாக்ட் செய்ய மாட்டேன். அதுவே நன்றாக நடிக்கிறீர்கள் என்றால் பெருமைப்படுவேன்.

பாலிவுட்
தமிழ் படங்களில் நான் இயற்கையாக நடிப்பதை விரும்புகிறார்கள். ஆனால் இந்தி படங்களில் கிளாமர், மசாலாவை எதிர்பார்க்கிறார்கள். என் துரதிர்ஷ்டம் எனக்கு இந்தியில் ஹிட்டான முதல் படம் கமர்ஷியல் படம்(ஹிம்மத்வாலா).

கிளாமர்
சாத்மா படத்தில் நான் கேரக்டர் ரோல் செய்தபோது படம் பிளாப் ஆகிவிட்டது. அதில் இருந்து என்னை கிளாமர் ரோல்களில் மட்டுமே நடிக்க வைத்தனர். எனக்கும் நடிக்கத் தெரியும் என்று ஒரு நாள் நான் நிரூபித்துக்காட்டுவேன்.

பெண்
நான் வாழ்க்கை முழுவதும் நம்பர் ஒன்னாக இருக்க முடியாது. அதுவும் நடிகையின் காலம் மிகவும் குறுகியது. என்னை விட இளமையான ஒருவர் என் இடத்தை பிடித்த உடன் நான் நடிப்பதை நிறுத்திவிடுவேன்.

ஸ்டைல்
உண்மையில் நான் ரொம்பவே சிம்பிள். நான் ஒரு சாதாரண ஆள். சுவாரஸ்யமாக எதுவும் இல்லை. மற்ற சாதாரண பெண்களுக்கு கூட ஸ்டைல் இருக்கும். ஆனால் எனக்கு அதுவும் இல்லை என்றார் ஸ்ரீதேவி.


Click it and Unblock the Notifications











