»   »  சிவா மனசுல புஷ்பா அரசியல் படம்தான்... ஆனால் தனிப்பட்ட யாருடைய கதையும் அல்ல! - வாராகி

சிவா மனசுல புஷ்பா அரசியல் படம்தான்... ஆனால் தனிப்பட்ட யாருடைய கதையும் அல்ல! - வாராகி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் வாராகி, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக அவதாரமெடுத்துள்ள 'சிவா மனசுல புஷ்பா' படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் இரண்டு வெளியிடப்பட்டன.

முழுக்க முழுக்க அரசியல் கதைகளம் கொண்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் விழா சென்னை, தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

Siva Manasula Pushpa first look posters launched

படத்தின் போஸ்டரை நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே கே ரித்திஷ் வெளியிட அதை தயாரிப்பாளர் ஜே எஸ் கே பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, கே ராஜன் உடனிருந்தனர்.

Siva Manasula Pushpa first look posters launched

படத்தைப் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இயக்குநரும் ஹீரோவுமான வாராகி , "பல அரசியல் சர்ச்சைகளை நிச்சயம் இப்படம் உருவாக்கும். மூன்று நாயகர்களிடம் இக்கதையை கொண்டு சென்றேன். யாரும் இதில் துணிந்து நடிக்க மறுத்தார்கள். ஆகவே, இப்படத்தில் நானே நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒரு அரசியல்வாதி என்றாலே நல்லவனாக இருக்க வேண்டும் இப்போதைய காலகட்டத்தில் அப்படி ஒருவரை பார்ப்பது அரிதாகிறது.

Siva Manasula Pushpa first look posters launched

இப்படத்தில் நாயகன் ஒரு பிரபல கட்சியின் உறுப்பினராகவும், நாயகி எதிர்கட்சியின் உறுப்பினராகவும் வருகிறார்கள். இன்னும் இரண்டு மாதத்தில் இப்படத்தினை திரைக்கு கொண்டு வர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்," என்று கூறினார்.

English summary
The first look posters of Varaaki's Siva Manasula Pushpa movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil