twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரைத் துளி

    By Staff
    |

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலையுலகில் நுழைந்து 50 ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி ஏவி.எம்.நிறுவனத்தில் அவருக்கு சிலையுடன் கூடிய நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

    சிவாஜி கணேசன் நடித்த முதல் படம் "பராசக்தி". ஏவி.எம். நிறுவனம் தயாரித்த இந்தப் படம் எடுக்கப்பட்டு 50ஆண்டுகள் ஆவதையொட்டி அவருடைய சிலையுடன் கூடிய நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

    "பராசக்தி" படத்தில் சிவாஜி பேசும் முதல் டயலாக்கான "சக்ஸஸ்" என்ற வசனத்தை ஏவி.எம். ஸ்டூடியோவில் அவர்பேசிய இடத்தில் தான் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

    நினைவுச் சின்னத்தின் மேல் சிவாஜியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதற்குக் கீழே "பராசக்தி" படத்தில்பங்காற்றிய அத்தனை கலைஞர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

    இந்த நினைவுச் சின்னத்தை நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார். சிவாஜியின் மகன்கள் நடிகர் பிரபு, ராம்குமார்,ஏவி.எம்.சரவணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கமல் கூறுகையில்,

    ஏவி.எம். நிறுவனத்தின் மூத்த பிள்ளையான சிவாஜியின் சிலையை இளைய பிள்ளையான நான் திறந்து வைப்பதுபெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

    நடிகர் திலகத்திற்கு உரிய மரியாதையை ஏவி.எம். நிறுவனம் தக்க சமயத்தில் செய்துள்ளது என்றார் கமல்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X