கதை பிடிக்கவில்லை... 'ராட்சசன்' பட இயக்குநரை சூடாக்கிய தனுஷ்... தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்!
சென்னை: நடிகர் தனுஷ் நடிக்க வேண்டிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் ராம் குமார். த்ரில்லர் படமான ராட்சசன் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏராளமான விருதுகளை குவித்தது. இந்தப் படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்படுகிறது.

முன்னணி நடிகர்கள்..
இதனை தொடர்ந்து இயக்குநர் ராம்குமார், அடுத்ததாக நடிகர் தனுஷை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ராம்குமார் இயக்கும் படத்தில் நடிகர் தனுஷுக்கு பதிலாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ராம் குமாரின் படத்தில் நடிக்க முன்னணி நடிகர்களே ஆர்வமாக உள்ளனர்.

கதை பிடிக்கவில்லை
இந்நிலையில் தனுஷை இயக்க ஆசைப்பட்ட இயக்குநர் ராம் குமார் ஒரு கதையை அவரிடம் கூறியுள்ளார். ஆனால அந்த கதை தனக்கு பிடிக்கவில்லை என கூறிவிட்டாராம் நடிகர் தனுஷ். இதனால் அப்செட்டான ராம்குமார் அந்த கதையை நடிகர் சிவகார்த்திகேயனிடம் கூறியுள்ளார்.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சிவகார்த்திகேயனுக்கு கதை ரொம்பவே பிடித்துவிட்டதாம். இதனால் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம் சிவகார்த்திகேயன். இப்படத்திற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தை முடிந்தவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்து படங்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தை முடித்துள்ளார். அயலான் படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து அனுதீப் இயக்கத்தில் நேரடித் தெலுங்குப் படத்திலும், தமிழில் சிங்கப்பாதை படத்திலும் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இதனை தொடர்ந்து ராம் குமார் இயக்கத்திலும் நடிப்பார் என கூறப்படுகிறது.
Recommended Video

ஓடிடியில் அட்ரங்கி ரே
சிவகார்த்திகேயனை போலவே தனுஷும் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்க உள்ளார். மாறன், திருச்சிற்றம்பலம் படங்கள் அவரது நடிப்பில் தயாராக உள்ளன. இந்தியில் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்துள்ள அட்ரங்கி ரே திரைப்படம் டிசம்பர் 24 ஓடிடியில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











