பாலிவுட்க்கு பறக்கும் சிவகார்த்திகேயன்.. பெரிய இயக்குநரிடம் இருந்து வந்த போன்.. SK எடுத்த உடனடி முடிவு
சென்னை: சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயனை ஒரு பாலிவுட் இயக்குநர் அணுகி உள்ளதாகதவும், தற்போது கதை கேட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் வெளியாகவுள்ள 100வது படம் இது.
பராசக்தி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஈர்ப்பும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கும்போது, இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவெடுத்தது சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பொதுவாகவே தனது படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது என்றாலே அந்த நடிகர் மகிழ்ச்சி அடைவார். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு இந்த படத்தில் அப்படியான மனநிலை இருக்காது என்ற பேச்சு பரவலாக உள்ளது. காரணம் பொங்கலுக்கு விஜய்யின் ஜன நாயகன் படமும் வெளியாக உள்ளது என்பதுதான்.

பாலிவுட் பறக்கும் சிவா: இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் குறித்து பரவி வரும் தகவல்கள் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. அதாவது சிவகார்த்திகேயனுக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பாலிவுட்டிலும் கால் பதிக்க சிவகார்த்திகேயன் முடிவெடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
முக்கியமான இயக்குநர்: அதாவது, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள சஞ்சய் லீலா பன்சாலி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். இது தொடர்பான தகவல்கள் தற்போது பாலிவுட்டையே பரபரப்பாக்கி உள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி பாலிவுட்டில் இருக்கும் மிகவும் முக்கியமான இயக்குநர். இவர் படங்கள் எப்போதும் பாலிவுட்டில் பரபரப்பையும் விவாதத்தையும் உருவாக்கிக் கொண்டே இருந்துள்ளது. கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான கங்குபாய் படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியையும் கவனத்தையும் பெற்றது.

பாலிவுட் என்ட்ரி: அதேபோல் பத்மாவத் படம் வட இந்தியாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இப்படி இருக்கும்போது இவரது இயக்கத்தில் பாலிவுட்டில் கால் பதிக்க வாய்ப்பு வந்தால் அதை அப்படியே பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம். அதனால்தான் சிவகார்த்திகேயன் மும்பையில் உள்ள சஞ்சய் லீலா பன்சாலி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல், கடந்த ஆண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் அமரன் படம் வெளியாகி இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படம் கொடுத்த வெற்றியும் ரீச்சும் தான் சிவகார்த்திகேயனுக்கு சஞ்சய் லீலா பன்சாலி உடனான சந்திப்புக்கு காரணமாக இருக்கும் என்றும் பேசப்படுகிறது. இவர்கள் சந்திப்பு தொடர்பான பேச்சுக்கள் தற்போது தமிழ் சினிமாவிலும் பரபரப்பான பேச்சுக்களை உருவாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











