விஜய்க்கு சொன்ன அதே கதையாம்.. நடிகர் சிவகார்த்திகேயனை இயக்குகிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்க இருந்தார், ஏ.ஆர்.முருகதாஸ்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருந்த இந்தப் படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு இருந்தார்.

கதைப் பிடிக்கலை
இது, துப்பாக்கி படத்தின் அடுத்த பாகம் எனவும் கூறப்பட்டது. இந்தப் படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், இந்தப் படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டதாகச் செய்திகள் வெளியாகின. முருகதாஸ் உருவாக்கிய கதை விஜய்க்குப் பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது.

முருகதாஸ் விலகல்
கதையை இரண்டு மூன்று முறை மாற்றியும் அவருக்குப் பிடிக்கவில்லை என்றும் இதையடுத்து அவர் படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாயின. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருந்தார். இந்நிலையில் விஜய்யின் அடுத்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

சிவகார்த்திகேயன்
இதற்கிடையே இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், அனிமேஷன் படம் ஒன்றை இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அவரை சந்தித்து கதைச் சொல்லியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

விரைவில் அறிவிப்பு
நடிகர் விஜய்க்கு சொன்ன கதையையே அவர் சிவகார்த்திகேயனுக்குச் சொன்னதாகவும் அவருக்கு அது பிடித்திருப்பதாகவும் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது நெல்சன் இயக்கும் டாக்டர், ரவிகுமாரின் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











