»   »  சிவகார்த்திகேயன் கழுத்து சுளுக்கு– தனுஷால் வந்த ஒரு தர்மசங்கடம்!

சிவகார்த்திகேயன் கழுத்து சுளுக்கு– தனுஷால் வந்த ஒரு தர்மசங்கடம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவின் இப்போதைய கீரி பாம்பு காம்பினேஷன் என்றால் அது தனுஷும் சிவகார்த்திகேயனும்தான். அந்த தனுஷ், சிவகார்த்திகேயனோடு விஜய் சேதுபதியையும் சேர்த்து மேடையேற்றப் போகிறார் கே.எஸ்.ரவிகுமார் என்றதுமே தொற்றியது பரபரப்பு. முடிஞ்சா இவன புடி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் இந்த கூத்து. ஆனால் அறிவித்தபோது ஏற்பட்ட பரபரப்பு விழா முடிந்த பின்னரும் நீடிக்கிறது.

விழா தொடங்குவதற்கு முன்பே தனுஷ், விஜய்சேதுபதி, சதீஷ் உள்ளிட்டோர் மேடையின் வலப்பக்கம் இருந்த இருக்கைகளில் அமர, சிவகார்த்திகேயன் அவர்களுக்கு சம்பந்தமே இல்லாமல் இடது பக்கம் தனியாக அமர்ந்திருந்தார். மேடையில் தனுஷ் பக்கத்தில் சிவகார்த்திகேயனை அமர வைத்தார்கள்.

Sivakarthikeyan Vs Dhanush

விழா முடியும்வரை தனுஷும் சிவாவும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை.

முக்கியமாக, தனுஷ் மைக் பக்கமே பார்த்துக்கொண்டிருக்க சிவாவோ தனுஷ் பக்கம் கூட பார்வையை விடாமல் தவிர்த்தார். ஆக, இரண்டு பேருக்குமே கழுத்தில் சுளுக்கே வந்திருக்கும். அதிலும் சிவா தான் ரொம்ம்ம்ம்ப பாவம். பக்கத்தில் இருந்த விஜய்சேதுபதியிடம் பேசிக்கொண்டு ரிலாக்ஸ் ஆக இருப்பது போலவே காட்டிக்கொண்டாலும் எல்லாவற்றையும் மீறி ஒரு டென்ஷன் பரவிக்கொண்டே தான் இருந்தது. சிவா பேசும்போது தனுஷுக்கு நன்றி சொல்ல, பதிலுக்கு தனுஷ் பேசும்போது சிவாகூட நடிச்சுட்டேன் என சிவாவைக் குறிப்பிட்டார்.

Sivakarthikeyan Vs Dhanush

அதுதான் ரெண்டு பேருக்கும் ஆகலைனு தெரியுதுல்ல... இனிமேலாவது இப்படி ஒரு தர்மசங்கடத்தை கொடுக்காதீங்கப்பா!

English summary
The Audio Launch stage of Mudinja Ivana Pudi has eye witnessed the enmity of actors Dhanush and Sivakarthikeyan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil