»   »  இப்போதைக்கு நடிப்புதான்... பவனுக்கு பை... இறைவியால் மனமாற்றமடைந்த எஸ் ஜே சூர்யா!

இப்போதைக்கு நடிப்புதான்... பவனுக்கு பை... இறைவியால் மனமாற்றமடைந்த எஸ் ஜே சூர்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இறைவி வெற்றி தந்த உற்சாகம், குவியும் பாராட்டுகளால் மனசு மாறிவிட்டார் எஸ் ஜே சூர்யா. இதன் விளைவு, அடுத்து தான் இயக்கவிருந்த பவன் கல்யாண் படத்திலிருந்து விலகிக் கொண்டார்.

பவன் கல்யாண் நடிப்பில் ஒரு தெலுங்குப் படத்தை எஸ்.ஜே. சூர்யா இயக்க ஒப்புக் கொண்டு, படப்பிடிப்பும் தொடங்கும் நிலையில் இருந்தது. மேலும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கும் திட்டத்திலும் இருந்தார்.

மனமாற்றம்

மனமாற்றம்

ஆனால் இறைவி படத்தில், தன்னுடைய நடிப்புக்கு அதிகப் பாராட்டுகள் கிடைத்ததால் அவர் தன் மனசை மாற்றிக் கொண்டுள்ளார்.

பவன் கல்யாண் நடிக்கும் படத்தை இயக்கும் பொறுப்பிலிருந்து எஸ்.ஜே. சூர்யா விலகிகd கொள்வதாக அறிவித்துள்ளார்.

எக்ஸ்க்யூஸ்

எக்ஸ்க்யூஸ்

'நடிக்க வரும் வாய்ப்புகளை வீணடிக்கமுடியவில்லை. அதனால் தேதிகளில் கொஞ்சம் மாற்றம் செய்துகொள்ளலாம்' என்று எஸ்.ஜே. சூர்யா, பவன் கல்யானிடம் முதலில் சொல்லியிருக்கிறார்.

டாலி

டாலி

ஆனால் இப்போது, அதெல்லாம் சரிப்பட்டு வராது. நீங்கள் வேறு இயக்குநரை வைத்துக் கொள்ளுங்கள். வேறு படத்தில் இணையலாம்' என்று கூறி வெளியில் வந்துவிட்டாராம். அந்தத் தெலுங்குப் படத்தை டாலி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பெரிய படங்கள்

மூன்று பெரிய படங்கள்

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் தமிழ் - தெலுங்குப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. மேலும் இயக்குநர் செல்வராகவன் இயக்கும் படத்திலும் அவர்தான் கதாநாயகன். கெளதம் மேனன் தயாரிப்பில், நந்திதா, ரெஜினா ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

English summary
SJ Surya has changed his mind and decided to continuing his acting career.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil