ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் இணைந்த எஸ்ஜே சூர்யா: RC 15 படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்

ஐதராபாத்: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'RC 15' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

'RC 15' படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ள நிலையில், எஸ்ஜே சூர்யாவும் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

டோலிவுட் சென்ற ஷங்கர்

டோலிவுட் சென்ற ஷங்கர்

பிரம்மாண்ட இயக்குநர் என கோலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷங்கர், தற்போது இரண்டு படங்களை இயக்கி வருகிறார். ஐ, 2.O படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் போனதை அடுத்து, கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை தொடங்கினார் ஷங்கர். ஆனால், படப்பிடிப்பில் விபத்து, பட்ஜெட்டில் சிக்கல் என இந்தியன் 2 முடிங்கிப் போனதால், டோலிவுட் மெகாபவர் ஸ்டார் ராம் சரணுடன் கூட்டணி வைத்தார்.

வேகமெடுக்கும் ‘RC 15’, ‘இந்தியன் 2’

வேகமெடுக்கும் ‘RC 15’, ‘இந்தியன் 2’

வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், தமன் இசை என பிரம்மாண்டமாக தொடங்கியது 'RC 15' படப்பிடிப்பு. ஆனால், சில காரணங்களால் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் ஷூட்டிங் இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது. அதேநேரம் கமலின் இந்தியன் 2 படப்பிடிப்பும் தற்போது அசுர வேகத்தில் நடந்து வருகிறது.

‘RC 15’ படத்தில் இணைந்த எஸ்ஜே சூர்யா

‘RC 15’ படத்தில் இணைந்த எஸ்ஜே சூர்யா

'RC 15' படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் படக்குழு, விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் தற்போது எஸ்ஜே சூர்யா இணைந்துள்ளதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படக்குழுவின் இந்த திடீர் அப்டேட் ரசிகர்களுக்கு அசத்தலான ட்ரீட்டாக அமைந்துள்ளது.

மிரட்டலான போஸ்டருடன் என்ட்ரி

மிரட்டலான போஸ்டருடன் என்ட்ரி

மகேஷ் பாபுவின் 'ஸ்பைடர்' படத்தில் வில்லனாக வெரைட்டி காட்டிய எஸ்ஜே சூர்யாவின் நடிப்புக்கு, தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால், 'RC 15' படத்தில் அவர் இணைந்துள்ளது ஷங்கர் - ராம் சரண் கூட்டணிக்கு பலமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், 'RC 15' படத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பதை அறிவித்துள்ள படக்குழு, கறுப்பு வெள்ளை கோட் சூட்டில் எஸ்ஜே சூர்யாவின் ஸ்டைலிஷான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X