»   »  கார்த்திக் சுப்பராஜ் ஒரு மாடர்ன் டே மணிரத்னம்!- எஸ் ஜே சூர்யா

கார்த்திக் சுப்பராஜ் ஒரு மாடர்ன் டே மணிரத்னம்!- எஸ் ஜே சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

இரண்டே படங்கள்தான். ஆனால் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற பெயரைப் பெற்றுவிட்டார் கார்த்திக் சுப்பராஜ்.

சூப்பர் ஸ்டாரே அழைத்து கதை கேட்கும் அளவுக்கு சரக்குள்ள பார்ட்டியாகப் பார்க்கப்படும் கார்த்திக் சுப்பராஜை சக இயக்குநர் ஒருவர் எப்படிப் பாராட்டியுள்ளார் தெரியுமா...

SJ Surya praises Karthik Subbaraj as modern day Manirathnam

'மாடர்ன் டே மணிரத்னம்'!

இப்படிப் பாராட்டியுள்ளவர் எஸ்ஜே சூர்யா.

இப்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் இறைவி படத்தின் நாயகர்களில் ஒருவரான எஸ்ஜே சூர்யா கூறுகையில், "ஒரு நாள் என்னைச் சந்தித்த கார்த்திக் சுப்பராஜ், உங்களை மனதில் வைத்து ஒரு கதை எழுதியிருக்கிறேன் என்றார். என் வாழ்நாளில் பெரிதாக சாதித்த உணர்வு வந்துவிட்டது. சாதனைப் படைத்த இயக்குநரான கார்த்திக் என்னை ஒரு நடிகனாக அங்கீகரித்தது பெரிய மகிழ்ச்சி.

என்னைப் பொருத்தவரை கார்த்திக் சுப்பராஜ் ஒரு மாடர்ன் டே மணிரத்னம்," என்றார்.

English summary
Director turned actor SJ Surya praised Director Karthik Subbaraj as modern day Manirathnam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil