»   »  ஸ்கெட்ச்... சென்சார் முடிந்தது... ஜனவரி 12 கன்ஃபர்ம்!

ஸ்கெட்ச்... சென்சார் முடிந்தது... ஜனவரி 12 கன்ஃபர்ம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் படத்தின் சென்சார் நேற்று முடிந்தது. இந்தப் படத்துக்கு யு ஏ சான்று வழங்கப்பட்டுள்ளது.

விக்ரம், தமன்னா, ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ள ஸ்கெட்ச் படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. ஆனால் சென்சார் செய்யும் பணி மட்டும் பாக்கியிருந்தது.

Sketch to hit screens on Jan 12

இந்த நிலையில் நேற்று படத்தை தணிக்கைக் குழுவினர் பார்த்து, யுஏ சான்றிதழ் வழங்கிவிட்டனர். இந்தப் படம் வரும் ஜனவரி 12-ம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவிருக்கிறது.

தானா சேர்ந்த கூட்டம், மன்னர் வகையறா உள்பட 6 படங்கள் பொங்கலுக்கு வெளியானாலும், ஸ்கெட்ச் படத்துக்கு 300க்கும் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் வட்டாரம் தெரிவிக்கிறது.

English summary
Vikram’s Sketch has been censored with UA certificate and confirmed its presence in the Pongal battle.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X