»   »  காயத்ரி, ஜூலி, சினேகனெல்லாம் கையில மாட்னா...! - கொந்தளிக்கும் வலைவாசிகள்

காயத்ரி, ஜூலி, சினேகனெல்லாம் கையில மாட்னா...! - கொந்தளிக்கும் வலைவாசிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிக் பாஸ் நிகழ்ச்சி எந்த அளவுக்கு வெறுக்கப்படுகிறதோ... அதே அளவுக்கு பார்க்கப்படுகிறது என்ற உண்மையை மறுக்க முடியாது. காரணம் நேற்றைய நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு சமூக வலைத் தளங்களில் வந்த பதிவுகளைப் பார்த்தபோது, 'அடடா... இவங்கள்லாம் கூட இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறார்களா?' என்று எண்ணமே மேலோங்கியது.

வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை பிக் பாஸ் பார்த்த அத்தனைப் பேருமே காயத்ரி, ஜூலி, சக்தி, நமீதா, சினேகனை கழுவி ஊற்றினர். என்னதான் முன் தயாரிக்கப்பட்ட நாடகம் இது என்றாலும், வெறுப்பின் உச்சிக்கே செல்ல வைக்கும் அளவுக்கு மோசமாக உள்ளதாக பலரும் திட்டித் தீர்க்கின்றனர்.

இத்தனை நாளும் நமீதா மீது ஓரளவு நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தவர்கள், இப்போது காயத்ரி ரேஞ்சுக்கு கரித்துக் கொட்டுகிறார்கள். யார் பிரச்சினையிலும் தலையிடாமல் தன் பாட்டுக்கு இருக்கும் ஒரு பெண்ணை இவர்கள் ஏன் விஷமத்தனமாக நடத்துகிறார்கள்.. அதுவும் தூங்க விடாமல் செய்வதும், கக்கூஸ் கழுவலைன்னா அதை யூஸ் பண்ணவே கூடாது என்கிற அளவுக்கு கீழ்த்தரமாகப் பேசுவதையும் பார்க்க ஆத்திரமாக உள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.

வன்முறை

வன்முறை

"ஓவியாகிட்ட அந்தப் பெண்கள் இல்ல பேய்கள் காட்டியது அதிகாரம் மட்டுமல்ல வன்முறை," என்று இயக்குநரும் எழுத்தாளருமான சந்திரா தெரிவித்துள்ளார்.

தலைவிக்கு ஏதும் நடந்தா...

தலைவிக்கு ஏதும் நடந்தா...

"ப்ரண்ட்ஸ் ரெடியா இருங்க...நாளைக்கு மட்டும் தலைவிக்கு எதுணா நடந்தா பிக்பாஸ் வீட்டு உள்ள புகுந்து அடிக்குறோம்.." - இது சந்திரசேகரன் என்பவரின் பேஸ்புக் பதிவு.

சூனியக்காரிகள்

சூனியக்காரிகள்

இது மூத்த பத்திரிகையாளர் கதிர் வேலின் பதிவு:

What a sh-t!

இந்த சூனியக்காரிகளால
டாய்லெட் என்ன கதி
ஆயிருக்கும்னு
இப்பதான தெரியுது..

லேடீஸ் ஃபிங்க்க்கர்

லேடீஸ் ஃபிங்க்க்கர்

அடிமையாக மாட்டேன்னு சொல்ற பெண்ணை
ஆம்பளைங்கதான்
அசிங்க படுத்றது வழக்கம்
பிக்பாஸ் தயவுல
அதர் சைடையும் பாத்தாச்சு.

ஓவியா கிரேட்

ஓவியா கிரேட்

"எச்ச, சேரி, மூஞ்சியும் மொகரக்கட்டையும், கேமரா முன்னாடி ட்ரெஸ் ஆபாசமா காட்டுறா, ஹேர் (மயிறு), என் கூட பேசுனே அவ்லோதான், வெளியே உனக்கு இருக்கு என்றெல்லாம் பேசிய மேட்டுக்குடி காயத்ரி முன்... ஓவியா கிரேட்." - இது அமிர்தம் சூர்யாவின் பதிவில் ஒரு பகுதி. முழு பதிவும் படமாக.

மார்க்குக்கே ஆவலாயிருக்கும்

மார்க்குக்கே ஆவலாயிருக்கும்

'ஹு இஸ் தட் ஓவியா? எனக்கே பார்க்கணும்போல இருக்கு!' அப்படினு பேஸ்புக் ஓனர் மார்க் சீக்கிரம் கேட்கப்போறார்! - இது வெ பூபதி என்பவர் கமெண்ட்.

இன்றைக்கு பிக்பாஸில் தொடர்ந்து ஓவியாவை டார்ச்சர் செய்தால், மேலே அர்ச்சனைக்குள்ளான காயத்ரி, ஜூலி, சக்தி, சினேகன், நமீதா ஆகியோர் வெளியில் தலைகாட்ட முடியாமல் போக வாய்ப்புள்ளது.

English summary
Social Media is completely turn against big boss participants Namitha, Gayathri, Juli, Snehan, Shakthi for their worst attitude towards Oviya.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil