»   »  அடித்து உதைத்து மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ஓடிய மகன்: பிரபல நடிகை கண்ணீர்

அடித்து உதைத்து மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ஓடிய மகன்: பிரபல நடிகை கண்ணீர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கீதா கபூரை அவரது மகன் ராஜா அடித்து கொடுமைப்படுத்தியதுடன் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

பகீஜா படப் புகழ் பாலிவுட் நடிகை கீதா கபூர் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டுள்ளார். அவருக்கு ராஜா என்ற மகனும், பூஜா என்ற மகளும் உள்ளனர்.


இந்நிலையில் கீதா கபூரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.


மருத்துவமனை

மருத்துவமனை

ராஜா தனது தாய் கீதா கபூரை மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு ஏடிஎம்மில் பணம் எடுத்து வருவதாகக் கூறி சென்றவர் வரவே இல்லை. அவரது செல்போனுக்கு கால் செய்தும் பலனில்லை.


மகள்

மகள்

கீதா கபூரின் மகள் பூஜாவுக்கு தொடர்ந்து போன் செய்தும் அவரும் எடுக்கவில்லை. இதையடுத்து மருத்துவமனை கீதா கபூருக்கு சிகிச்சையை துவங்கியது.


ரூ. 1. 5 லட்சம்

ரூ. 1. 5 லட்சம்

கீதாவுக்கு சிகிச்சை அளித்த பில் ரூ. 1. 5 லட்சம் வந்தது. இந்த செலவை சென்சார் போர்டு உறுப்பினர் அசோக் பண்டிட் மற்றும் தயாரிப்பாளர் ரமேஷ் தாராணி ஆகியோர் ஏற்றுக் கொண்டுள்ளனர். கீதா தனது பிள்ளைகளால் கைவிடப்பட்டது பாலிவுட்காரர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


முதியோர் இல்லம்

முதியோர் இல்லம்

ராஜா தனது தாய் கீதாவை முதியோர் இல்லத்திற்கு செல்லுமாறு கூற அவர் மறுத்துள்ளார். இதையடுத்து ராஜா கீதாவை அடித்து உதைத்து, நான்கு நாட்களுக்கு ஒரு முறை உணவு அளித்து, அறையில் பூட்டி வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதில் கீதாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டவுடன் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ராஜா ஓடிவிட்டார்.


English summary
Pakeezah actress Geeta Kapoor has been abandoned by his son Raja. Raja got his mother admitted in a hospital and ran away.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil