twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நெபோடிசம் சர்ச்சை.. பிரபல நடிகை பற்றி ஆன்லைனில் அவதூறு கருத்து.. இளைஞரை அமுக்கியது சைபர் கிரைம்!

    By
    |

    மும்பை: பிரபல நடிகை பற்றி ஆன்லைனில் அவதூறு பரப்பி வந்தவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

    Recommended Video

    Tapsee Thappad தமிழ் Review | Anubhav Sinha | Tapsee Pannu | Domestic Violence

    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, இந்தி சினிமாவில் நெபோடிசம் குறித்து சர்ச்சை எழுந்தது.

    வாரிசு நடிகர், நடிகைகளால் மற்றவர்களுக்கான வாய்ப்பு பறிபோவது உள்ளிட்டவற்றை வைத்து சமூக வலைத்தளங்களில் காரசாரமான வாக்குவாதங்கள் நடந்துவருகின்றன.

    ஊர் சுத்த முடியல.. கொரோனாவே போய்விடு.. வைரலாகும் நயன்தாரா விக்னேஷ் சிவன் க்யூட் போட்டோ!ஊர் சுத்த முடியல.. கொரோனாவே போய்விடு.. வைரலாகும் நயன்தாரா விக்னேஷ் சிவன் க்யூட் போட்டோ!

    சோனம் கபூர், ஆலியா பட்

    சோனம் கபூர், ஆலியா பட்

    சிலர், வாரிசு நடிகர், நடிகைகளின் சமூக வலைத்தள பக்கங்களுக்கு சென்று சரமாரியாக விளாசினர். அவர்களை கண்டபடி திட்டி பதிவுகளை இட்டனர். சோனம் கபூர், ஆலியா பட், உள்பட பல வாரிசு நடிகைகளின் பக்கங்களுக்கு சென்றும் நெட்டிசன்கள் கேள்வி கேட்டனர். நடிகை சோனாக்‌ஷியின் வலைதளப் பக்கத்துக்கும் சென்று அவதூறு கருத்துக்களை பதிவிட்டனர்.

    சோனாக்‌ஷி சின்ஹா

    சோனாக்‌ஷி சின்ஹா

    பிரபல இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள் சோனாக்‌ஷி. இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய லிங்கா படத்தில் ரஜினி ஜோடியாக நடித்திருந்தார். நெபோடிசம் குறித்த வாக்குவாதத்துக்குப் பதிலளித்த சோனாக்‌ஷி, 'ஒருவர் மரணமடைந்திருக்கும் நேரத்தில் சிலர் அவர்கள் பிரச்னைகளைச் சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். தயவுசெய்து அப்படி செய்வதை நிறுத்துங்கள்' என்று கூறியிருந்தார்.

    விழிப்புணர்வு பிரசாரம்

    விழிப்புணர்வு பிரசாரம்

    நடிகை கங்கனாவைதான் அவர் மறைமுகமாக அப்படி தெரிவித்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்தும் அவரை பலர் ட்ரோல் செய்து வந்தனர். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் ட்விட்டரில் இருந்து விலகினார் சோனாக்‌ஷி. இருந்தும் விடாமல் அவரை சில நெட்டிசன்கள் அவதூறாகவும் ஆபாசமாகவும் வசைபாடி வந்தனர். ஆன்லைன் துன்புறுத்தலின் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தை இப்போது முன்னெடுத்துள்ளார்.

    சைபர் கிரைம்

    சைபர் கிரைம்

    இதையடுத்து சோனாக்‌ஷியின் டீம், கடந்த 14 ஆம் தேதி மும்பை சைபர் கிரைம் போலீசில் அவருக்கு எதிராக அவதூறு பரப்புபவர்கள் பற்றி புகார் செய்தது. வழக்குப் பதிவு விசாரணை நடத்திய போலீசார் அகமதாபாத்தைச் சேர்ந்த சஷிகாந்த் ஜாதவ் (27) என்பவரை கைது செய்தனர். இதற்காக மும்பை சைபர் கிரைம் போலீசுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சோனாக்‌ஷி.

    பெண்கள் பாதுகாப்பு

    பெண்கள் பாதுகாப்பு

    இதுபற்றி சைபர் கிரைம் டிசிபி, ராஷ்மி கரண்டிகர் கூறும்போது, நடிகை சோனாக்‌ஷியின் புகாரை அடுத்து ஒருவரை கைது செய்துள்ளோம். இணையதளத்தை பாதுகாப்பான வெளியாக மாற்றுவதே எங்கள் நோக்கம். கூடவே பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். அவதூறு பரப்புவது தண்டனைக்குரிய குற்றம். அதை சகித்துக்கொள்ள முடியாது என்றார்.

    English summary
    Sonakshi Sinha’s team had filed an FIR for online harassment on August 14 and one person has been arrested in relation to the case
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X