»   »  இணையத்தில் லீக்கான பாடல்... கடுப்பில் இயக்குநர்!

இணையத்தில் லீக்கான பாடல்... கடுப்பில் இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் சூர்யா, 'சிங்கம் -3' படத்திற்குப் பிறகு 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

Song leaked on the internet

சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தவிர, ரம்யா கிருஷ்ணன், சரண்யா, கோவை சரளா, செந்தில், கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா மற்றும் சத்யன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்து வருகிறது. இப்படத்துக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் ஒரு லிரிக்கல் வீடியோ பாடல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.


Song leaked on the internet


இந்நிலையில், அந்தப் படத்தின் ஒரு குத்துப் பாடலின் சில வினாடிகள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. 18 விநாடிகள் ஓடும் இந்த வீடியோ படப்பிடிப்பின்போது ரசிகர்களால் எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அந்த பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.இதனைப் பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் திரையரங்கில் ஜாலியாக பார்க்கலாம். இதுபோன்ற விஷயங்களைப் பார்ப்பதையும், பகிர்வதையும் ஆதரிக்காதீர்கள்' என ட்வீட் செய்துள்ளார்.


English summary
Thaanaa serndha koottam song leaked on the internet. Director vignesh shivan tweet about this isuue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil