அரபிக்குத்தே அதிருது...பீஸ்ட் டீசர் வேற வர போகுதாமே...எப்போ தெரியுமா ?

சென்னை : பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து சாதனையே இன்னும் முடியவில்லை. இந்நிலையில் பீஸ்ட் படத்தின் டீசரை வெளியிட படக்குழு தயாராகி வருகிறதாம். இது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெகா பட்ஜெட் படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஏப்ரல் 14 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அப்டேட் கேட்ட ரசிகர்கள்

அப்டேட் கேட்ட ரசிகர்கள்

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டிலும் ஃபஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. அதற்கு பிறகு எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை. ஆனால் படத்தின் ஷுட்டிங், 100 வது நாள் ஷுட்டிங் போட்டோ, சண்டைக்காட்சி ஷுட்டிங் வீடியோ என அடுத்தடுத்து இணையத்தில் கசிந்து ரசிகர்களை குஷிப்படுத்தியது.

காதலர் தினத்தில் அரபிக்குத்து

காதலர் தினத்தில் அரபிக்குத்து

ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டு வந்ததால் தீபாவளிக்கே பீஸ்ட் ஃபஸ்ட் சிங்கிளை வெளியிடுவார்கள் என கூறப்பட்ட நிலையில் பிப்ரவரி முதல் வாரத்தில் அதற்கான ப்ரோமோ ஒன்றை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. ஆர்வத்தை தூண்டும் இந்த ப்ரோமோ வீடியோவே செம டிரெண்ட் ஆன நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு ஃபஸ்ட் சிங்கிளான அரபிக்குத்து என டைட்டில் வைக்கப்பட்ட ஹலமதி ஹபிபோ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த பாடலை யூட்யூப்பில் தற்போது வரை 68 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளதுடன், நம்பர் ஒன் டிரெண்டிங் பாடலாகவும் மாறி உள்ளது.

 படத்தில் அரபிக்குத்து இல்லையாமே

படத்தில் அரபிக்குத்து இல்லையாமே

ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி, சிவகார்த்திகேயன் எழுதி, ஜோனிடா காந்தியுடன் இணைந்து அனிருத் இசையமைத்து பாடிய இந்த பாடல் பீஸ்ட் படத்தில் இடம்பெறவில்லையாம். திரைக்கதையின் வேகம் காரணமாக படத்தின் இடையில் இந்த பாடலை சேர்க்க முடியவில்லையாம். இருந்தாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடலாக இது மாறி உள்ளதால் படத்தின் முடிவில் அரபிக்குத்து பாடலை சேர்க்க படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பீஸ்ட் டீசர் எப்போ

பீஸ்ட் டீசர் எப்போ

இதற்கிடையில் மற்றொரு தகவலாக, பீஸ்ட் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதாம். டீசர் தயாரிக்கும் வேலையும் முடிந்து விட்டதாம். அதனால் பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் பீஸ்ட் டீசரை வெளியிட போகிறார்களாம். இதை கேள்வி பட்டதும் நெட்டிசன்கள், அரபிக்குத்துக்கே இங்க சோஷியல் மீடியா அதிருது. இதில் டீசர் வேறயா. அது எத்தனை சாதனைகளை முறியடிக்க போகுதோ என கேட்டு வருகின்றனர். நிச்சயம் மாஸ் அதிரடியாக தான் இருக்கும் என கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X