ஆஹா...செம மேட்டரா இருக்கே...டாப் ஹீரோ மகனும் வலிமை படத்தில் நடித்துள்ளாராமே

சென்னை : வலிமை படம் ரிலீசாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையிலும் கூட விதவிதமாக, புது புது அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறது வலிமை படக்குழு. வலிமை படத்தில் பிரபல டாப் ஹீரோ ஒருவரின் மகனும் இணைந்து நடித்துள்ளார் என்ற தகவல் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் படமான வலிமை பிப்ரவரி 24 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஹுமா குரேஷி, யோகிபாபு, கார்த்திகேயா, சுமித்ரா, புகழ், சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

என்ன நான்ஸ்டாபாக 7 ஷோவா

என்ன நான்ஸ்டாபாக 7 ஷோவா

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் ரிலீசாகும் வலிமை தான் உலக அளவில் அதிக தியேடே்டர்களில், மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்படும் அஜித்தின் முதல் படமாகும். வலிமை படத்திற்கான டிக்கெட் புக்கிங்கும் துவங்கி அசுர வேகத்தில் நடந்து வருகிறது. சென்னை கோயம்பேடு ரோகினி தியேட்டரில் மட்டும் இடைவிடாது காலை 4.30 மணி துவங்கி 7 ஷோக்கள் திரையிடப்பட உள்ளதாம். சென்னையில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் முதல் நாள் வலிமை ஷோவிற்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்து விட்டனவாம்.

ஹவுஸ்ஃபுல் போர்டுடன் ரிலீஸ்

ஹவுஸ்ஃபுல் போர்டுடன் ரிலீஸ்

வலிமை ரிலீசாகும் பல தியேட்டர்களில் முதல் நாள் ஷோவிற்கு தற்போதே ஹவுஸ்ஃபுல் போர்டு போடப்பட்டு விட்டதாம். கிட்டதட்ட பெரும்பாலான தியேட்டர்கள் அல்லது அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் போர்டுடன் தான் முதல் நாள் ஷோ திரையிடப்பட உள்ளதாம். இதனால் ரசிகர்கள் செம உற்சாகமாகி உள்ளனர்.

அட இவரும் நடித்துள்ளார்

அட இவரும் நடித்துள்ளார்

கடைசி நிமிடம் வரை வலிமை படத்தின் மீதான ஆர்வத்தை தூண்ட அப்டேட் வெளியிட்டு வருகிறார்கள். இதில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், வலிமை படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் நடித்துள்ளாராம். இந்த தகவல் தற்போது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. சூர்யா சேதுபதி ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதியின் மகனாகவே நடித்திருந்தார். இந்நிலையில் வலிமை படத்திலும் சூர்யா நடித்துள்ளாராம்.

அடுத்த வில்லன் இவர் தானா

அடுத்த வில்லன் இவர் தானா

ஏற்கனவே விஜய் சேதுபதி, விஜய், ரஜினி, கமல் என அடுத்தடுத்து பல டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக அடுத்தடுத்து நடித்து வருகிறார். தற்போது அஜித்தின் வலிமை படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் நடித்துள்ளதால், இனி அஜித் அடுத்து நடிக்கும் படங்களில் விஜய் சேதுபதி வில்லன் ரோலில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X