விஜய்யின் வாரிசு படத்தில் 'ஆல்தோட்ட பூபதி' ரீமிக்ஸ்...இது வேற லெவல் பிளானா இருக்கே

சென்னை : விஜய் நடித்து வரும் வாரிசு படம் பற்றிய தகவல்கள் தான் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. படத்தின் அடுத்த அப்டேட் எப்போ வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Recommended Video

Varisu First Look புதிய சாதனை படைக்குமா_ _ Thalapathi Vijay _ _Kollywood

டைரக்டர் வம்சி பைடபள்ளி, விஜய்யின் 66 வது படத்தை சென்டிமென்ட், ஆக்ஷன் படமாக உருவாக்கி வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா பேனரில் தில் ராஜு தயாரித்து வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். விஜய் படத்திற்காக தமன் இசையமைப்பது இதுவே முதல் முறையாகும்.

ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, பிரபு, சங்கீதா கிருஷ், சம்யுக்தா கிருஷ், ஸ்ரீகாந்த், சாம் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தில், தெலுங்கு சூப்பர் ஹீரோ மகேஷ்பாபு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.

காப்பின்னாலும் எங்களுக்கு ஸ்பெஷல் தான்

காப்பின்னாலும் எங்களுக்கு ஸ்பெஷல் தான்

தளபதி 66 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட இந்த படத்திற்கு வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜுன் 22 ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட்லுக், செண்ட்லுக் மற்றும் மூன்றாவது லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. ஃபர்ஸ்ட் சிங்கிள் ரஜினியின் கபாலி படத்தின் காப்பி, செகண்ட் லுக் சந்திரமுகி படத்தின் காப்பி என கூறி சோஷியல் மீடியாவில் விமர்சிக்கப்பட்ட போதும் விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

 மறுபடியும் எடுக்க போறாங்களா

மறுபடியும் எடுக்க போறாங்களா

வாரிசு படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட ஷுட்டிங் சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் சில சீன்களின் ஷுட்டிங் ஸ்பாட் வீடியோ மற்றும் போட்டோக்கள் வெளியில் கசிந்து, பரபரப்பானதால், இந்த சீன்களை மீண்டும் வேறு மாதிரி எடுத்து வருகிறாராம் டைரக்டர் வம்சி பைடபள்ளி.

விஜய் ரோல் என்ன

விஜய் ரோல் என்ன

வாரிசு படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இரண்டு கேரக்டர்களுக்கும் சமமான முக்கியத்துவம், எமோஷன், பிளாஷ்பேக் என அனைத்தும் வைத்துள்ளார்களாம். ஒரு விஜய்க்கு ராஷ்மிகாவும், மற்றொரு விஜய்க்கு மெஹ்ரின் பிர்சோடாவும் ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் ஒரு விஜய் கேரக்டர், இரண்டு குழந்தைகளுக்கு அப்பா என கூறப்படுகிறது.

கதையை கணிக்க முடியலியே

கதையை கணிக்க முடியலியே

சரத்குமார், விஜய்யின் அப்பாவாகவும், ஜெயசுதா அம்மாவாகவும், சாம் மற்றும் ஸ்ரீகாந்த் அண்ணன்களாகவும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. கதையின் கேரக்டர்கள் பற்றி கூறுவதை வைத்து பார்த்தால் குடும்ப சென்டிமென்ட படமாக தோன்றுகிறது. ஆனால் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பார்த்தால் விஜய் பெரிய பணக்காரர். வெளிநாட்டில் வாழ்கிறார். வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருபவர் என்பது போல் தான் போஸ்டர்கள் மூலம் கணிக்க முடிகிறது. இதனால் படத்தின் கதை என்ன என்பதை சரியாக கணிக்க முடியாமல் அனைவரும் குழம்பிப் போய் உள்ளனர்.

விஜய் பாட்டு பாடுறாரா

விஜய் பாட்டு பாடுறாரா

வாரிசு படத்தின் கேரக்டர்கள், கதை பற்றி தான் அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் யோசிக்காத சர்ப்ரைசை படத்தின் இசையில் வைத்துள்ளாராம் தமன். இந்த படத்தில் இரண்டு பாடல்கள் இருப்பதாகவும், அதில் ஒன்று, சென்டிமென்ட் பாடல் என்றும் கூறப்பட்டது. இந்த படத்தில் விஜய் தனது சொந்த குரலில் ஒரு பாடல் பாடி உள்ளதாக கூறப்படுகிறது.

 வாரிசில் ஆல்தோட்ட பூபதி ரீமிக்சா

வாரிசில் ஆல்தோட்ட பூபதி ரீமிக்சா

விஜய் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசை இதில் நிறைவேறி உள்ளதால், விஜய்யுடன் வெற்றி கூட்டணி அமைத்த யுவன்சங்கர் ராஜா, அனிருத் ஆகியோர் வரிசையில் தானும் இடம்பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகிறாராம் தமன். படத்தின் பாடல்களுக்கு ஏற்கனவே இசையமைத்து முடித்து விட்டாராம். தற்போது பேக்கிரவுண்ட் மியூசிக் அமைத்து வருகிறாராம். மாஸாக இருப்பதற்காக விஜய் நடித்த சூப்பர்ஹிட் பாடலான யூத் படத்தில் வரும் ஆல்தோட்ட பூபதி பாட்டை இந்த படத்தில் ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தி இருக்கிறாராம்.

பாட்டு பட்டையை கிளப்புமே

பாட்டு பட்டையை கிளப்புமே

ஏற்கனவே ஆல்தோட்ட பூபதி பாடல் கேட்கும் அனைவரையும் எழுந்து ஆட்டம் போட வைக்கும். அப்படி ஒரு எனர்ஜி இசையிலும், விஜய் -சிம்ரன் டான்ஸிலும் அமைந்திருக்கும். இதில் ரீமிக்சாக வேறு அந்த பாடல் அமைத்தால் என்ன எஃபெக்டில் இருக்கும் என ரசிகர்கள் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர். அந்த பாடலை எப்போ ரிலீஸ் பண்ணுவீங்க என இப்போதே கேட்க துவங்கி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X