என்னது...கமலே பிக்பாஸை தொகுத்து வழங்குகிறாரா... எப்படின்னு தெரியுமா ?

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக 50 நாட்களை கடந்துள்ளது. ஏழு வாரங்களைக் கடந்து 12 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 6 பெண் போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர். அடுத்தபடியாக வெளியேற போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதல் வைல்கார்டு என்ட்ரியாக மீண்டும் அபிஷேக் ராஜா, பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வரப்பட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன் மற்றும் நடிகரும் சின்னத்திரை பிரபலமுமான சஞ்சீவ் இரண்டாவது வைல்ட்கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

கமலுக்கு கொரோனா

கமலுக்கு கொரோனா


இந்நிலையில் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமலஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்த கமலுக்கு இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததால், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கமல், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கமல் எப்போது வருவார்

கமல் எப்போது வருவார்

இதனால் பிக்பாஸில் வரும் வாரத்தின் கமல் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோட்களை யார் தொகுத்து வழங்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கமல் சிகிச்சை முடிந்து, வழக்கமான பணிகளுக்கு துவங்க இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை ஆகலாம் என கூறப்படுகிறது. அதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்ஷனை நிறுத்தி வைக்கலாமா என பிக்பாஸ் டீம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மற்றொரு பிரபலத்துடன் பேச்சு

மற்றொரு பிரபலத்துடன் பேச்சு

கமலுக்கு பதில் அவரது மகள் ஸ்ருதிஹாசனை தொகுத்து வழங்க வைக்கலாமா அல்லது மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியை தொகுத்து வழங்க வைக்கலாமா, இல்லையென்றால் சிம்புவை கூப்பிடலாமா என பலவிதங்களில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

 கமலே தொகுத்து வழங்குகிறாரா

கமலே தொகுத்து வழங்குகிறாரா

ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி கமலே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்க போவதாக கூறப்படுகிறது. மருத்துவமனை அல்லது வீட்டில் இருந்து Virtual முறையில் கமல் தொகுத்து வழங்க போவதாக கூறப்படுகிறது. ஆனால் இது பற்றி கமல் தான் முடிவு செய்ய வேண்டுமாம். அதனால் கமல் மற்றும் டாக்டர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறதாம்.

 Virtual புதிதல்ல

Virtual புதிதல்ல

கொரோனா மற்றும் லாக்டவுன் சமயத்தில் விஜய் டிவி பல நிகழ்ச்சிகளை Virtual முறையிலேயே நடத்தியது. பிக்பாஸ் நிகழ்ச்சியும் கடந்த சீசனில் பார்வையாளர்கள் நேரடியாக அனுமதிக்கப்படாமல், Virtual முறையிலேயே அனுமதிக்கப்பட்டனர். கமல் உள்ளிட்ட பிரபலங்கள் வெளிநாட்டு விழாக்கள் பலவற்றிலும் ஜும் செயலி வழியாகவே பங்கேற்றனர்.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

அதனால் கமலை வைத்தே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த போகிறார்களாம். அவரால் முடியாத பட்சத்திலேயே ஸ்ருதிஹாசனிடம் பேசி, கன்ஃபார்ம் பண்ண விஜய் டிவி முடிவு செய்துள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X