50 வது நாளில் மற்றொரு வைல்ட்கார்டு என்ட்ரியா... புதிதாக வர போவது யார் ?

சென்னை : அக்டோபர் 3 ம் தேதி 18 போட்டியாளர்களுடன் பிரம்மாண்ட விழாவுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 5. இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனின் ஆரம்பம் முதலே கமல் அணிந்து வரும் ஆடைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த சீசனின் முதல் வார இறுதியில் தவிர்க்க முடியாத மருத்துவ காரணங்களால் தானாக வெளியேறியதாக பிக்பாசால் அறிவிக்கப்பட்டார் திருநங்கையும், மாடலுமான நமிதா மாரிமுத்து. அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் நாமினேஷன் மூலம் நாடியா சாங், சின்ன பொண்ணு, அபிஷேக்ராஜா, சுருதி, மதுமிதா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

இதய பாதிப்பால் உயிருக்கு போராடும் 5 மாத குழந்தை.. உங்களால் முடிந்த உதவிகளை உடனே செய்யுங்கள்

மீண்டும் வந்த அபிஷேக்

மீண்டும் வந்த அபிஷேக்

நிகழ்ச்சியின் 21 வது நாளில் நாமினேஷன் மூலம் வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா, வைல்ட்கார்டு என்ட்ரியாக 47 வது நாளில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இவரது ரீஎன்ட்ரி ஒரு சிலரை தவிர வீட்டிற்குள் உள்ளும், வெளியிலும் உள்ள பெரும்பாலானவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் மற்றவர்கள் நினைத்ததை போல் இல்லாமல், ரீஎன்ட்ரியில் மிகவும் அமைதியாக இருந்து வருகிறார் அபிஷேக்.

அடுத்த எவிக்ஷன் யார்

அடுத்த எவிக்ஷன் யார்

நேற்றோடு ஏழு வாரங்கள் நிறைவடைந்துள்ளது. இதில் ஏழாவது வார இறுதியில் இசைவாணி, நாமினேஷன் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் மீண்டும் 12 போட்டியாளர்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இனி போட்டிகள் கடுமையாக இருக்கும், அடுத்து வெளியேற போவது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் இப்போதே எழுந்து விட்டது.

 அடுத்த வைல்ட்கார்டு என்ட்ரியா

அடுத்த வைல்ட்கார்டு என்ட்ரியா

இந்நிலையில் இன்று பிக்பாஸ் சீசன் 50 வது நாளை தொடுகிறது. இதனை முன்னிட்டு இரண்டாவது வைல்ட்கார்டு என்ட்ரியாக மற்றொரு பிரபலம் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இவர் தான் வர போகிறாரா

இவர் தான் வர போகிறாரா

ஏற்கனவே பல தகவல்கள் உறுதி செய்ததை போல் விஜய்யின் நண்பர் சஞ்சீவ் உள்ளே செல்வதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், ஏற்கனவே முதல் வைல்ட்கார்டு என்ட்ரியாக ஆண் போட்டியாளர் ஒருவர் அனுப்பப்பட்டுள்ளதால், இரண்டாவது வைல்ட்கார்டு என்ட்ரியாக பெண் போட்டியாளர் ஒருவர் அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ட்விஸ்ட் கன்ஃபார்ம்

ட்விஸ்ட் கன்ஃபார்ம்

இரண்டாவது வைல்ட்கார்டு என்ட்ரியாக நமிதா மாரிமுத்து அல்லது ஷாலு ஷம்மு அனுப்பப்படலாம் என கூறப்படுகிறது. இருந்தாலும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற பிக்பாஸ் டயலாக்கிற்கு ஏற்ற மாதிரி புதிய ட்விஸ்ட் ஏதாவது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் 50 வது நாளான இன்று ஒரு சஸ்பென்ஸ் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X