9 ஆண்டுகளுக்கு பிறகு நேருக்கு நேர் மோதும் விஜய் - அஜித் படங்கள்...உற்சாகத்தில் ரசிகர்கள்
சென்னை : தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என்ற போட்டி ரசிகர்களிடம் காலம் காலமாக நடந்து வருகிறது. அந்த வரிசையில் விஜய் - அஜித் என்பது சமீப காலமாக ஏற்பட்டிருக்கும் போட்டி.
Recommended Video
நிஜ வாழ்க்கையில் இவர்கள் நண்பர்களாக இருந்தாலும், ரசிகர்களிடம் இவர்களில் யார் பெஸ்ட் என போட்டியாகவே பார்க்கப்படுகிறது. விஜய் படம் பற்றிய தகவல் வந்தால் அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்வதும் அஜித் படம் வந்தால் விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்வதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அதுவும் சோஷியல் மீடியாவின் வளர்ச்சிக்கு பிறகு ரசிகர்களின் போட்டி இன்னும் அதிகரித்துள்ளது. இதனால் ரசிகர்களிடையேயான மோதலை தவிர்க்க விஜய், அஜித்தும் தங்கள் படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆவதை தவிர்த்து வருகிறார்கள்.

9 ஆண்டுகளுக்கு முன் மோதல்
கடைசியாக 2014 ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லா படமும், அஜித்தின் வீரம் படமும் ஒரே சமயத்தில் ரிலீசாகின. இரண்டு படங்களும் ஹிட் அடித்தன. பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலை பெற்றன. அதற்கு பிறகு இவர்கள் இருவரின் படங்களும் ஒரே சமயத்தில் ரிலீசாகவில்லை.

வாரிசு - ஏகே 61 ஒரே நாளிலா
ஆனால் தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் ஏகே 61 படமும், விஜய்யின் வாரிசு படமும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

தள்ளிப்போகும் ஏகே 61 ரிலீஸ்
டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவித்து விட்டனர். ஆனால் அஜித்தின் ஏகே 61 படம் முதலில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டது. பிறகு படத்தின் ஷுட்டிங் முடிய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளதாக கூறுகிறார்கள்.

பொங்கலை குறிவைக்கும் ஏகே 61
படத்தை தீபாவளிக்கு முன் முடித்து, ரிலீஸ் செய்ய முடியாது என்பதால் அடுத்து வரும் பண்டிகைக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளிக்கு பிறகு ரிலீசிற்கு சரியான தேதி அமையாததால் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என முடிவு செய்திருக்கிறார்களாம்.

விரைவில் அறிவிப்பு வருமா
இதற்கு முன் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிடக் கூட ஆலோசிக்கப்பட்டதாம். ஆனால் பண்டிகை நாளில் ரிலீஸ் செய்யதால் தான் நன்றாக இருக்கும் என படக்குழு நினைத்துள்ளதாம். ஆனால் இது பற்றி அதிகாரப்புர்வமான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 12 ம் தேதி வெளியிட தயாரிப்பாளர் போனி கபுர் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











