அடி தூள்... விஜய்யின் தளபதி 66 க்கு இப்படி ஒரு அப்டேட்டா...படத்தில் அடுத்து இணைய போவது யார்?

சென்னை : விஜய்யின் தளபதி 66 படத்தில் நடிக்கும் நடிகர் - நடிகைகள் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. இதனால் இன்னும் யாரெல்லாம் படத்தில் இணைய போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்கள் விஜய். ஸ்ரீ வெங்கடேஷ்வரா பேனரில் தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தளபதி 66 படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து ஒரு சில நாட்கள் மட்டுமே சென்னையில் முதல் கட்ட ஷுட்டிங் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட ஷுட்டிங் சமீபத்தில் ஐதராபாத்தில் துவங்கப்பட்டது. அது முடிந்து மூன்றாம் கட்ட ஷுட்டிங்கும் துவங்கி நடந்து வருகிறது. இதில் விஜய்யுடன் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளும் பங்கேற்று வருவதாக கூறப்படுகிறது.

ஒரு சீன் கூட எடுக்கலியா

ஒரு சீன் கூட எடுக்கலியா

தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இதில் ஒன்று சென்டிமென்ட் பாடல் என்றும் கூறப்படுகிறது. பாடலுக்கு இசையமைக்கும் பணியில் பெரும்பாலான பணிகளை தமன் முடித்து விட்டாராம். இதுவரை கிடைத்த தகவலின்படி, இதுவரை நடத்தப்பட்ட தளபதி 66 ஷுட்டிங்கில் பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட்டு வருகிறதாம். இதுவரை ஒரு சீன் கூட எடுக்கப்படவில்லையாம். சென்னையில் அமைக்கப்பட்டு வரும் செட்டில் தான் படத்தின் சீன்கள் எடுக்கப்பட உள்ளதாம்.

யாருக்கு என்ன ரோல்

யாருக்கு என்ன ரோல்

தளபதி 66 படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். விஜய்க்கு அப்பா ரோலில் சரத்குமாரும், இரண்டு அண்ணன்களில் ஒருவராக ஷாமும், மற்றொரு அண்ணனாக தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்தும் நடிக்கிறார்கள். அம்மா ரோலில் ஜெயசுதா நடிக்கிறார் என கூறப்பட்டது. இவர்கள் தவிர பிரபு, பிரகாஷ் ராஜ், சங்கீதா, பிக்பாஸ் சம்யுக்தா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட இப்படியொரு அப்டேட்டா

அட இப்படியொரு அப்டேட்டா

லேட்டஸ்ட் தகவலின் படி, தளபதி 66 படத்தில் இரண்டு ஹீரோயின்களாம். இரண்டாவது ஹீரோயின் யார் என்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாம். இதனால் வழக்கமான தமிழ் சினிமாவில் வருவது போல் ஒரு ஹீரோயின் இறந்து விடுவாரா அல்லது விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா என ரசிகர்கள் ஆவலாக கேட்டு வருகின்றனர்.

யாருப்பா அந்த இன்னொருவர்

யாருப்பா அந்த இன்னொருவர்

தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் எடுக்கப்படுவதால் இரு மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் நடிகை ஓவர் தான் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு, இதற்காக பல நடிகைகளின் பெயரும் கூறப்பட்டது. பிறகு புஷ்பா படத்தில் நடித்து, ஃபேமசாக உள்ள ராஷ்மிகாவை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது இரண்டாவது ஹீரோயின் இருப்பதாக சொல்லப்படுவதால் அது யாராக இருக்கும் என ரசிகர்கள் ஆர்வம் காட்ட துவங்கி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X