என்னங்க சொல்றீங்க...தளபதி 66 ஷுட்டிங்கில் இது தான் நடக்குதா?...விஜய் தான் இதற்கு காரணமா?

சென்னை : விஜய்யின் தளபதி 66 ஷுட்டிங் பற்றி இதுவரை வெளியான தகவல்கள், ரசிகர்களை செம குஷியாக்கி உள்ள நிலையில், தற்போது வெளியாகி உள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதே சமயம் விஜய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

விஜய் தற்போது வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு தயாரித்து வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இத்தனை பேர் இருக்காங்களா

இத்தனை பேர் இருக்காங்களா

முதல் கட்ட ஷுட்டிங்கில் சென்னையில் சிறியதாக ஒரு பாடல் காட்சி மட்டும் எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டாவது ஷுட்டிங் ஐதராபாத்தில் நடத்தப்பட்டு, தற்போது மூன்றாம் கட்ட ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகிபாபு, சங்கீதா, பிக்பாஸ் சம்யுக்தா ஷாம் உள்ளிட்டோர் முக்கியமான ரோல்களில் நடித்து வருகின்றனர்.

ஹிட் ஆக்காமல் விடமாட்டேன்

ஹிட் ஆக்காமல் விடமாட்டேன்

தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் உள்ளதாம். இவற்றில் பெரும்பாலான பாடல்களின் வேலைகளை தமன் ஏற்கனவே முடித்து விட்டாராம். இதில் ஒரு சென்டிமென்ட் பாடலாம். தனது சினிமா வாழ்க்கையில் மிக சிறந்த பாடலாக தளபதி 66 பாடல்களை உருவாக்கி வருவதாகவும், இந்த பட பாடல்களை நிச்சயம் சூப்பர் ஹிட் ஆக்கியே தீருவேன் என தமன் தனது பேட்டியில் ஏற்கனவே கூறி உள்ளார்.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

தளபதி 66 படத்தில் இன்னும் பல நடிகர், நடிகைகள் இணைய உள்ளதால் விரைவில் அதிகாரப்பூர்வமாக படக்குழு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம். விஜய் பிறந்தநாளன்று தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டைட்டில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு தளபதி 66 ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

என்ன சொல்றீங்க...நிஜமாவா

என்ன சொல்றீங்க...நிஜமாவா

படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடப்பதால் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின்படி, தளபதி 66 படத்தில் ஷுட்டிங்கில் இதுவரை ஒரு சீன் கூட எடுக்கப்படவில்லையாம். பாடல்களுக்கான ஷுட்டிங் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டு வருகிறதாம். இதை முடித்த பிறகு சென்னைக்கு போய் அங்கு அமைக்கப்பட்டு வரும் செட்டில் தான் படத்தின் சீன்கள் எடுக்கப்பட உள்ளதாம்.

இது தான் காரணமா

இது தான் காரணமா

தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின்(பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக் கொண்டதால், பெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் சென்னையில் ஷுட்டிங்கை நடத்த வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டதால் படத்தின் பெரும்பாலான ஷுட்டிங்கை சென்னையில் நடத்த படக்குழு ஒப்புக் கொண்டதாம். இதற்காக விஜய்க்கு தமிழ் சினிமா துறையை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X