இந்தியை போல் தமிழிலும் தொடங்கும் பிக்பாஸ் ஓடிடி... 42 நாட்கள்.. 13 போட்டியாளர்கள்... ஹாட் தகவல்!

சென்னை: இந்தி ஓடிடி பிக்பாஸ் போல் தமிழிலும் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

100 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி மாதம் மத்தியில நிறைவடையும் என தெரிகிறது. இந்நிலையில் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கரண் ஜோஹர்

கரண் ஜோஹர்

இந்தியில் முதல் முறையாக இந்த ஆண்டுதான் பிக்பாஸ் ஓடிடி தொடங்கியது. 42 நாட்கள் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் 13 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கியுள்ளார்.

தமிழிலும் பிக்பாஸ் தமிழ் ஓடிடி

தமிழிலும் பிக்பாஸ் தமிழ் ஓடிடி

இந்த நிகழ்ச்சி வூட் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பானது. இந்த பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் திவ்யா அகர்வால் வின்னர் ஆனார். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இந்தியை போல் தமிழிலும் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 முடிந்ததும்

பிக்பாஸ் சீசன் 5 முடிந்ததும்

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் ஜனவரி மாதம் நிறைவடைய உள்ளது. இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் இறுதியில் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியும் இந்தி பிக்பாஸ் ஓடிடியை போல 42 நாட்கள் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

ஹாட் ஸ்டார் தளத்தில்

ஹாட் ஸ்டார் தளத்தில்

இதில் 13 போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன்களில் பங்கேற்ற சிறந்த போட்டியாளர்களாக இருப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

ரசிகர்களின் விருப்ப பட்டியல்

ரசிகர்களின் விருப்ப பட்டியல்

இதனை பார்த்த ரசிகர்கள், அப்படியானால் பிக்பாஸ் ஓடிடியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் என ஒரு பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, ஓவியா, ஆரி, சனம் ஷெட்டி, ஐஸ்வர்யா, ரித்விகா, லாஸ்லியா, முகென், பாலாஜி முருகதாஸ், கணேஷ் வெங்கட்ராமன், அனிதா சம்பத், பிரியங்கா, சாண்டி ஆகியோர் இடம் பெறலாம் என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X