வசூலில் பிரச்சனை வரும்.. வலிமை ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு.. ஹாட் தகவல்!

சென்னை: வசூலில் பிரச்சனை வரும் என்பதால் வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்கும் படம் வலிமை. பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார். வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார்.

அப்டேட் கேட்ட ரசிகர்கள்

அப்டேட் கேட்ட ரசிகர்கள்

மேலும் இப்படத்தில் யோகி பாபு, விஜய் டிவி பிரபலம் புகழ் உட்பட பலர் நடிக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் அலுத்து போய்விட்டனர். சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரிடமும் அப்டேட் கேட்டு வந்தனர்.

கடந்த ஜூலையில் அப்டேட்

கடந்த ஜூலையில் அப்டேட்

வெளிநாடுகளில் நடக்கும் கிரிக்கெட் மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகளிலும் வலிமை அப்டேட் கேட்டு விரக்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் அவர்களின் அப்டேட் பசிக்கு தீனி போடும் வகையில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.

ரிலீஸ் தேதி மாற்றம்

ரிலீஸ் தேதி மாற்றம்

மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் வலிமை படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிலீஸ் தேதியை மாற்றம்

ரிலீஸ் தேதியை மாற்றம்

அதவாது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வலிமை படமும் அதே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டால் வசூலில் பிரச்சனை ஏற்படும் என்பதால் படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது.

தீபாவளியில் ரிலீஸ் ஆகும் மாநாடு

தீபாவளியில் ரிலீஸ் ஆகும் மாநாடு

அதன்படி வலிமை படம் வரும் டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தீபாவளி பண்டிகைக்கு நடிகர் சிம்புவின் மாநாடு படமும் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X