twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேன்ஸ் திரைப்பட விழா சிறந்த நடிகர் இவரா?..யாரும் எதிர்பாராத ஒருவர்

    |

    க்யோடோ, பிரான்ஸ் : இந்த ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விருது வழங்கும் விழா சிறப்பான வகையில் களைக்கட்டியது.

    இதில் இந்தியாவில் இருந்தும் ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். தீபிகா படுகோன் விழாவின் ஜூரியாக இருந்தார்.

    கமல்ஹாசனின் விக்ரம், மாதவனின் ராக்கெட்ரி படங்களின் ட்ரெயிலர்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டன.

     விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோல் முக்கியமானதாக இருக்கும்..நடிகர் நரேன்! விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோல் முக்கியமானதாக இருக்கும்..நடிகர் நரேன்!

     கேன்ஸ் 2022 விழா

    கேன்ஸ் 2022 விழா

    கேன்ஸ் திரைப்பட விழா 2022 இந்த ஆண்டு பிரான்சின் க்யோடோவில் சிறப்பாக நடந்துள்ளது. இதில் ஏராளமான சிறப்பான விஷயங்கள் நடைபெற்றுள்ளன. இந்தியாவில் இருந்து தீபிகா படுகோன் இந்த விழாவின் ஜூரியாக கலந்துக் கொண்டார். அவர் ஜூரிகளில் ஒருவராக ரெட் கார்ப்பெட்டில் நடந்தது அனைவரையும் கவர்ந்தது.

    இந்திய பிரபலங்கள்

    இந்திய பிரபலங்கள்

    கேன்ஸ் பட விழாவில் இந்தியாவின் முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்றனர். கமல் ஹாசன், தீபிகா படுகோனே, ஏ.ஆர்.ரஹ்மான், நவாசுத்தீன் சிதீக்கி, பார்த்திபன், பா.ரஞ்சித், தமன்னா, ஐஸ்வர்யா ராய்,பூஜா ஹெக்டே, அனில் கபூர், ஊர்வசி ரவுடெல்லா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். அவர்களுக்கு ரெட் கார்பெட் வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் அனுரா தாக்கூர் உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர்.

    திரையிடப்பட்ட ட்ரெயிலர்

    திரையிடப்பட்ட ட்ரெயிலர்

    கேன்ஸ் பட விழாவில் கமல்ஹாசனின் விக்ரம் படம் ட்ரெய்லர் திரையிடப்பட்டது, மாதவனின் ராக்கெட்ரி, ஆர் பார்த்திபனின் இரவின் நிழல் ஆகிய படங்கள் திரையிடப்பட்டது. இது தவிர 6 படங்கள் போட்டுக்காண்பிக்கப்பட்டது. இதில் விக்ரம், ராக்கெட்பெரி படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. கமலின் விக்ரம் படத்தின் போஸ்டரை இந்தியாவிலேயே முதன்முறையாக என்.எஃப்.டியில் வெளியிட்டார். ஆர்.பார்த்திபனின் வித்தியாசமான படம் இரவின் நிழலும் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.

    சிறந்த நடிகருக்கான விருது

    சிறந்த நடிகருக்கான விருது

    இதனிடையே இந்த 75வது கேன்ஸ் விழாவில் விருது பெற்றவர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகருக்கான இந்த ஆண்டின் விருதை தென்கொரியாவின் சாங் கேங் ஹோ பெற்றுள்ளார். 55 வயதான இவர் இயக்குநர் கொரீடாவின் ப்ரோக்கர் படத்திற்காக இந்த விருதை பெற்றுள்ளார்.

    முதல் தென்கொரிய நடிகர்

    முதல் தென்கொரிய நடிகர்

    இதன்மூலம் கேன்ஸ் விருதை வென்றுள்ள முதல் தென்கொரிய நடிகர் என்ற புகழ் இவருக்குக் கிடைத்துள்ளது. இதனிடையே, ஜப்பானிய இயக்குநரான கொரீடா, ஜப்பான் அல்லாத பிறமொழிப் படத்தை இரண்டாவது முறையாக ப்ரோக்கர் படம் மூலம் இயக்கியுள்ளார். முன்னதாக கடந்த 2019ல் தி ட்ரூத் என்ற படத்தை அவர் இவ்வாறு இயக்கினார்.

    குழந்தைக் கடத்தல்

    குழந்தைக் கடத்தல்

    அவருக்கு தென்கொரிய பழக்கவழக்கங்கள் அத்துபடியாக இருந்ததால் அவருடன் இணைந்து பணியாற்றியது சிரமமாக தெரியவில்லை என்று சாங் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விருது கிடைத்ததற்காக அவர் இயக்குநருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் குழந்தைகளை குறிப்பாக பெண் குழந்தைகளை கடத்துபவர்களில் ஒருவராக சாங் நடித்துள்ளார்.

    English summary
    South Korea Actor Song gets Cannes 2022 award for Best Actor
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X