பாகுபலி,ஆர்.ஆர்.ஆர்யை மிஞ்சும் ராஜமௌலியின் அடுத்த படைப்பு..சாகசபடமா? கொல மாஸ் அப்டேட்!
சென்னை : ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த படைப்பில் ஹாலிவுட் பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
என்டிஆர், ராம்சரண்,அஜய்தேவ்கன், ஆலியாபட் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோட்ட திரைப்படம் ஆர்ஆர்ஆர்.
இந்த படம் அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல வரவேற்பையும் 1000 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

மகேஷ்பாபுவுடன்
ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி அடுத்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்தின் ஆரம்பக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது. ராஜமௌலி எடுக்கும் படங்களை போலவே அதிக பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக இத்திரைப்படமும் இருக்கும்.

காட்டுப்பகுதியில் ஷூட்டிங்கா?
காடுகளை மையமாக வைத்து உருவாகவிருக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஆப்பிரிக்க காடுகளில் நடைபெற இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடத்தின் இறுதிக்குள் படம் குறித்த அதிகாரபூர்வ வெளியாகும் என்றும், இதுவரை அவர் இயக்கத்தில் உருவான படங்களை போலவே இந்த படமும் நல்லதொரு வரவேற்பை பெரும் என்றும் கூறப்படுகிறது.

சாம்யுவெல் லிராய் ஜாக்சன்
இந்நிலையில்,சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த ராஜமௌலி, மகேஷ் பாபுவுடன் படத்தில் இணைய உள்ளதாக இணையத்தில் வெளியான தகவல்கள் உறுதி அளிக்கும் விதமாக பேசியுள்ளார். அப்படம் சாகசங்கள் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என்று கூறியுள்ளார். தற்போது இந்த கூட்டணியில் அவேஞ்சர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள முக்கிய ஹாலிவுட் நடிகர் சாம்யுவெல் லிராய் ஜாக்சன் என்பவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாகச படமா?
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவினரிடம் இருந்து வரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இருப்பினும் இந்த நடிகர் படத்தில் இருந்தால் கண்டிப்பாக இது ஒரு சாகச படமாக தான் இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











