தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி நியமனம்! தமிழக அரசு அதிரடி!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதா நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி நடைபெற்றது. பெரும் இழுபறிக்கு பின்னர் தேர்தல் நடைபெற்றது.

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதன்காரணமாக தேர்தல் முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

லாக்கரில் வாக்குகள்

லாக்கரில் வாக்குகள்

இதனால் வாக்குகள் இதுவரை எண்ணப்படவில்லை. தேர்தல் முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் உள்ளது. நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

பொறுப்பேற்கவில்லை

பொறுப்பேற்கவில்லை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2015 - 2018ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்தது. அதிலிருந்து தற்போது வரை புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கவில்லை.

சிறப்பு அதிகாரி நியமனம்

சிறப்பு அதிகாரி நியமனம்

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை அரசு சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி கீதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தயாரிப்பாளர் சங்கம்

தயாரிப்பாளர் சங்கம்

புதிய உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு வரும் வரை சிறப்பு அதிகாரி தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாக பணிகள், நடிகர் சங்க கட்டடப் பணி மற்றும் நடிகர்களுக்கான ஓய்வூதிய திட்டம் தொடர்பான பணிகளை கவனிபப்பார் என கூறப்படுகிறது.சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்ட போது, சேகர் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X