»   »  வட பழனியில் மேலும் 7 புதிய அரங்குகள்.. விரைவில் ஐமேக்ஸ் அரங்கம்!

வட பழனியில் மேலும் 7 புதிய அரங்குகள்.. விரைவில் ஐமேக்ஸ் அரங்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வடபழனியில் உள்ள விஜயா ஃபோரம் மாலில், எஸ்பிஐ சினிமாஸின் (சத்யம்) 7 புதிய திரையரங்குகள் நமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த மாலில் மொத்தம் உள்ள 9 திரையரங்குகளில் 7 நேற்று பிற்பகல் 3 மணிக்கு முதல் காட்சிகள் தொடங்கப்பட்டன. 7 திரையங்குகளிலும் தமிழ்ப் படங்களே திரையிடப்பட்டுள்ளன.

விஜயா ஃபாரம் மாலில் எஸ்பிஐ சினிமாஸின் ஐமேக்ஸ் திரையரங்கம் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SPI Cinemas launches 7 new theaters

பேலஸ்ஸோ என பெயரிடப்பட்டுள்ள இந்த 9 அரங்குகளின் மொத்த இருக்கைகள் 3010. ஃபோரம் மாலின் 3வது மாடியில் இந்த அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

ஸ்பா, வைஃபை வசதி, உணவகம் என அனைத்து வசதிகளும் இங்குண்டு.

சமீபத்தில் எஸ்பிஐ சினிமா வசமிருந்த ஒரு ஐமேக்ஸ் அரங்கம் உள்ளிட்ட 11 அரங்குகள் கொண்ட லக்ஸ் மல்டிப்ளெக்ஸை ஜாஸ் சினிமா நிறுவனம் வாங்கியது. அதன் பிறகு, இப்போது புதிதாக இந்த 9 அரங்குகளைத் திறக்கும் வேலையில் இறங்கியது சத்யம் சினிமாஸ்.

English summary
SPI Cinemas (Sathyam) has launched 7 new state of art theaters on Monday at Vijaya Forum Mall, Vadapalani, Chennai.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil