twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சேவியர் சோனு சூட்.. விமானத்தில் பிரம்மாண்ட போஸ்டர் அடித்து ராயல் சல்யூட் வைத்த ஸ்பைஸ் ஜெட்!

    |

    மும்பை: கடந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் காரணமாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த லட்சக் கணக்கான தொழிலாளர்களை தனது சொந்த முயற்சியின் மூலம் குடும்பத்துடன் இணைத்த நடிகர் சோனு சூட்டுக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது.

    ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்துடன் இணைந்து வெளிநாட்டில் தவித்த மாணவர்கள் உள்பட ஏகப்பட்ட மக்களையும் நடிகர் சோனு சூட் தாயகம் திரும்ப உதவி செய்தது பாராட்டுக்களை அள்ளியது.

    சூப்பர்.. வாத்தி கம்மிங் பாடலுக்கு வெறித்தனமாக ஆடிய 7 வயது சிறுவன்.. பாராட்டி தள்ளிய ஷில்பா ஷெட்டி!சூப்பர்.. வாத்தி கம்மிங் பாடலுக்கு வெறித்தனமாக ஆடிய 7 வயது சிறுவன்.. பாராட்டி தள்ளிய ஷில்பா ஷெட்டி!

    சேவியர், மெசய்யா, சூப்பர் மேன் என நடிகர் சோனு சூட்டை ஏகப்பட்ட பட்டப் பெயர்களால் மக்கள் அழைத்து வருகின்றனர்.

    ரியல் ஹீரோ

    ரியல் ஹீரோ

    அருந்ததி, ஒஸ்தி, தபாங், குங்ஃபூ யோகா என கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை வில்லனாக நடித்து கலக்கியவர் நடிகர் சோனு சூட். சினிமாவில் வில்லனாக நடித்த இவர், நிஜ வாழ்வில் மிகப்பெரிய ஹீரோவாக அதுவும் சூப்பர் ஹீரோவாக கடந்த ஆண்டு கொரோனா காரணமாக போடப்பட்ட லாக்டவுனில் மாறினார்.

    பல லட்சம் மக்களை

    பல லட்சம் மக்களை

    மும்பையில் இருந்து கர்நாடகாவுக்கு 10 பேருந்துகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பி வைப்பதில் தொடங்கிய இவரது சேவை பல லட்சம் மக்களுக்கு பயனுள்ளவராக கடந்த ஆண்டு இவரை மாற்றியது. சொகுசாக ஏசி ரூமில் அடைந்து கிடக்காமல், வேலை மற்றும் உணவின்றி வாடும் மக்கள் குடும்பத்துடன் சேர்ந்து இருந்தாலாவது சந்தோஷமாக இருப்பார்கள் என நினைத்து களத்தில் இறங்கி பாடுபட்டார்.

    சேவியர் சோனு சூட்

    சேவியர் சோனு சூட்

    சோனு சூட்டின் இந்த உயரிய சேவையை நாடு முழுவதும் மக்கள் பாராட்டினர். மெசய்யா என்றும் சூப்பர் மேன் என்றும் மக்களை காக்க வந்த கடவுள் என்றும் சோனு சூட்டை மக்கள் வாழ்த்தினர். லட்சக் கணக்கான முகங்களில் சந்தோஷத்தை கொண்டு வந்து சந்தோஷப்பட்ட சோனு சூட்டை சேவியர் சோனு சூட் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பாராட்டி மிகப்பெரிய கெளரவத்தையும் கொடுத்துள்ளது.

    விமானத்தில் போஸ்டர்

    விமானத்தில் போஸ்டர்

    கபாலி, தர்பார் உள்ளிட்ட ரஜினிகாந்த் படங்களுக்கு விமானத்தில் பிரத்யேகமாக போஸ்டர்கள் விளம்பர ரீதியாக ஒட்டப்பட்ட நிலையில், முதல் முறையாக சோனு சூட்டின் தன்னலமற்ற சேவையை பாராட்டி ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் போயிங் 737 விமானத்தில் சோனு சூட்டின் போஸ்டரை ஒட்டி A Salute to the Saviour Sonu Sood என ராயல் சல்யூட் வைத்திருக்கிறது.

    1500 மாணவர்கள்

    1500 மாணவர்கள்

    இது தொடர்பாக பேட்டியளித்துள்ள ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் உயர் அதிகாரி அஜய் சிங், கொரோனா காரணமாக போடப்பட்ட லாக்டவுன் சமயத்தில் கிர்கிஸ்தானில் சிக்கிய 1500 இந்திய மாணவர்களை ஸ்பைஸ் ஜெட் உடன் சோனு சூட் தாயகம் கொண்டு வந்தார். மேலும், ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், மணிலா மற்றும் அல்மட்டி உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் இந்தியர்களை மீட்டெடுத்தார். அவரது சேவையை பாராட்டும் விதமாக இந்த சிறிய அங்கீகாரத்தை ஸ்பைஸ் ஜெட் வழங்கி உள்ளது எனக் கூறியுள்ளார்.

    அன்ரிசர்வ்ட் டிக்கெட்டில் வந்தேன்

    அன்ரிசர்வ்ட் டிக்கெட்டில் வந்தேன்

    மோகாவில் இருந்து மும்பைக்கு அன்ரிசர்வ்ட் டிக்கெட்டில் வந்தது தான் நினைவுக்கு வருகிறது. இந்த பேரன்புக்கு எனது நன்றிகள், என் பெற்றோர்களை இந்த நேரத்தில் ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன் என உருக்கமாக தனது நன்றியை நடிகர் சோனு சூட் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.

    English summary
    Spice Jet gives a royal salute to Saviour Sonu Sood with big posters in their Boeing 737 flight for his pandemic time service.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X