பார்த்திபனுக்கு சம்பந்தியாகும் பிரபல எடிட்டர்.. கீர்த்தனாவை கரம்பிடிக்கும் மாப்பிள்ளை யார் தெரியுமா?

By Vignesh Selvaraj

Recommended Video

எடிட்டருக்கு சம்பந்தியாகும் தேசிய விருது எடிட்டர்

சென்னை : நடிகரும், இயக்குநருமான ரா.பார்த்திபனின் மகள் கீர்த்தனாவின் திருமணம் வரும் மார்ச் 8ம் தேதி நடைபெற இருக்கிறது.

முன்னணி சினிமா எடிட்டர் ஶ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்‌ஷய் அக்கினேனியை தான் திருமணம் செய்துகொள்ள இருக்கிறாராம் கீர்த்தனா.

கீர்த்தனாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் அக்‌ஷய் அக்கினேனி 'பீட்சா' படத்தை இந்தியில் ரீமேக் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் - நடிகர்

இயக்குநர் - நடிகர்

'புதிய பாதை' திரைப்படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்தவர் ரா.பார்த்திபன். அதன்பிறகு பல படங்களை இயக்கியுள்ள பார்த்திபன், ஏகப்பட்ட படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இவருக்கும், நடிகை சீதாவுக்கும் கீர்த்தனா என்ற மகள் இருக்கிறார்.

கீர்த்தனா

கீர்த்தனா

மணிரத்னம் இயக்கத்தில் 2002'ம் ஆண்டு ரிலீஸான 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் கீர்த்தனா. இந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது.

உதவி இயக்குநர்

உதவி இயக்குநர்

கீர்த்தனா நடிப்பில் கவனம் செலுத்தாமல், டைரக்‌ஷனில் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றும் கீர்த்தனா, விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார்.

ஶ்ரீகர் பிரசாத்தின் மகன்

ஶ்ரீகர் பிரசாத்தின் மகன்

கீர்த்தனாவுக்கும், தேசிய விருதுபெற்ற பிரபல எடிட்டரான ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்‌ஷய் அக்கினேனிக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. ஶ்ரீகர் பிரசாத் தான் தரமணி, மெர்சல் உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர். அக்‌ஷய், விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துள்ளார்.

அக்‌ஷய் அக்கினேனி

அக்‌ஷய் அக்கினேனி

அக்‌ஷய் அக்கினேனி, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பீட்சா' படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய திருமணம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் மார்ச் 8-ம் தேதி நடைபெற இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X