»   »  சிறு பட்ஜெட் படங்களை எடுத்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிலைமையே வேற... ஒரே நேரத்தில் இத்தனை படங்கள்!

சிறு பட்ஜெட் படங்களை எடுத்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிலைமையே வேற... ஒரே நேரத்தில் இத்தனை படங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ஒரு காலத்தில் சிறு பட்ஜெட் படங்களை மட்டுமே தயாரித்து வந்த நிறுவனம். இதன் நிறுவனரான ராம நாராயணன் தான் இயக்கிய எண்பதுக்கும் மேற்பட்ட படங்களை தனது தயாரிப்பு நிறுவனத்திற்காகவே இயக்கினார்.

ராம நாராயணனின் மறைவுக்கு பிறகு தேனாண்டாள் பிலிம்ஸை கையில் எடுத்த அவரது மகன் முரளி ராமசாமியும், ஹேமா ருக்மணியும் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கத் தொடங்கினர். சமீபத்தில் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்த மெர்சல் படம் அந்த நிறுவனத்தின் 100-வது படமாக அமைந்தது.

Sri thenandal films producing 7 films at a same time

தற்போது ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் ஒரே நேரத்தில் 7 படங்களை தயாரித்து வருகிறார்கள். ஜெயம்ரவி, ஆர்யா ஆகியோர் நடிக்கும் சங்கமித்ரா 300 கோடி ரூபாய் செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

சசி இயக்கத்தில், சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம், உதயநிதி நடிப்பில் மித்ரன் இயக்கும் படம், தனுஷ் இயக்கும் அடுத்த படம், மாயா பட இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்ஜே.சூர்யா நடிக்கும் 'இறவாக் காலம்', எம்.ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம், மெட்ரோ இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்கும் படம் என ஏழு படங்களை தயாரிக்கிறது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்.

சிறு பட்ஜெட் படங்களின் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த தேனாண்டாள் பிலிம்ஸ் பெரிய படங்களையும் துணிந்து தயாரித்து வருகிறது. படத்தின் மார்க்கெட்டிங், ப்ரொமோஷன் ஆகியவற்றில் அதிக கவனம் எடுத்து செயல்படுத்தி வருகிறார்கள் தயாரிப்புக் குழுவினர்.

English summary
Once upon a time, Sri Thenandal Films produces only small budget films. Murali Ramasamy and Hema Rukmani began to produce big budget films after the death of Rama Narayanan. Recently 'Mersal' movie, which was made in a budget of more than 120 crores. They are currently producing 7 films at the same time on behalf of Sri Thenandal Films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X