»   »  காளஹஸ்தி கோவிலில் மகள் ஜான்விக்கு சர்பதோஷ பூஜை செய்த ஸ்ரீதேவி

காளஹஸ்தி கோவிலில் மகள் ஜான்விக்கு சர்பதோஷ பூஜை செய்த ஸ்ரீதேவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகை ஸ்ரீதேவி ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோவிலில் தனது மூத்த மகள் ஜான்விக்காக பிரார்த்தனை செய்தார்.

கோலிவுட்டில் வெற்றி நாயகியாக ஒரு காலத்தில் வலம் வந்த மயிலு ஸ்ரீதேவி பாலிவுட் சென்று அங்கேயே செட்டிலாகிவிட்டார். பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை மணந்து ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்களுக்கு தாயானார்.

அதன் பிறகு பல ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த அவர் இங்கிலிஷ் விங்கிலிஷ் இந்தி படம் மூலம் மறுபிரவேசம் செய்தார்.

புலி

புலி

பாலிவுட்டில் செட்டில் ஆன ஸ்ரீதேவி பல ஆண்டுகள் கழித்து விஜய் நடிக்கும் புலி படம் மூலம் கோலிவுட்டுக்கு மீண்டும் வந்துள்ளார். இளம் நடிகர், நடிகைகளிடம் இருந்து பலவற்றை கற்றுக் கொண்டுள்ளதாக புலி படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிறகு ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

ஆந்திரா

ஆந்திரா

புலி படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்றது. அந்த படப்பிடிப்பில் விஜய், ஸ்ருதி ஹாஸன், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டார். படப்பிடிப்பு முடிந்த பிறகு ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோவிலுக்கு செல்ல ஸ்ரீதேவி திட்டமிட்டார்.

ஜான்வி

ஜான்வி

ஸ்ரீதேவி தனது மூத்த மகள் ஜான்வி கபூருடன் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றார். அங்கு மகளுக்காக சர்ப்பதோஷ நிவாரண பூஜை நடத்தினார். சுமார் 45 நிமிடங்கள் நடந்த பூஜையில் அவர் கலந்து கொண்டு மகளுக்காக பிரார்த்தனை செய்தார்.

அகில் அகினேனி

அகில் அகினேனி

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலாவின் மகன் அகில் அகினேனி ஜோடியாக தெலுங்கு படம் மூலம் நடிகையாக உள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் அகிலுடன் நடிக்கவில்லை.

படிப்பு

படிப்பு

நான் தான் சிறு வயதில் இருந்தே நடிக்கத் துவங்கியதால் படிக்க முடியாமல் போனது. என் மகள் படித்து முடித்த பிறகே அவள் நடிக்க விரும்பினால் தாராளமாக நடிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவி.

ஷாருக்கான் மகன்

ஷாருக்கான் மகன்

பாலிவுட் பாதுஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன் கானுக்கு ஜோடியாக ஜான்வி நடிப்பார் என்று அண்மையில் செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Veteran actress Sridevi has performed special prayers for her elder daughter Jhanvi Kapoor at the Sri Kalahasti temple

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil