Don't Miss!
- News
ஓபிஎஸ்-க்கு கட்சியே இல்லை- ஓபிஎஸ் ஒரு செல்லாக்காசு.. இப்படி பொளந்து கட்டுறாரே பொன்னையன்!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Sports
அதனால் தான் அவர் கிங் கோலி.. என்னுடைய 10 வயது உனக்கு தான்.. சுப்மன் கில்லை உற்சாகப்படுத்திய கோலி
- Lifestyle
தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஜான்விக்கு சினிமாத்துறை பற்றி அட்வைஸ் கொடுத்த நடிகை ஸ்ரீதேவி
மும்பை : பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஜான்வி கபூர் நடித்த குட் லக் ஜெர்ரி படம் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து இவர் அளிக்கும் பேட்டிகளும் செம வைரலாகி, பரபரப்பை கிளப்பி வருகின்றன.

ஜான்வி கபூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது மறைந்த தாயார் ஸ்ரீதேவி பற்றி பேசியிருந்தார்.முன்னாள் நடிகையான ஸ்ரீதேவி, தான் இறப்பதற்கு முன் அவரின் மகளிடம் திரைப்படத்துறையில் பல சவால்களையும் சிக்கல்களையும் சந்திக்க தயார் செய்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். சினிமா துறையில் சாதித்து தனது அம்மாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதையே குறிகோளாக வைத்துள்ளதாக ஜான்வி பேசினார்.
அந்த காட்சியில் நடிகை உள்ளாடையே போடலையா.. ஜூம் போட்டு பார்க்கும் நெட்டிசன்கள்.. உண்மை என்ன?
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து புகழின் உச்சியை தொட்டவர் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை 1996-ல் மணந்தார். இருவருக்கும் ஜான்வி, குஷி என இரு மகள்கள் பிறந்தனர். ஸ்ரீதேவி 2018 ஆம் ஆண்டு துபாயில் நடந்த குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது, திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
பிரபலமான நிகழ்ச்சி ஒன்றில் ஜான்வி , தனது அம்மாவாகிய ஸ்ரீதேவி கூறிய சில விஷயங்களை பகிர்ந்தார். ஜான்வியிடம் ஸ்ரீதேவி கூறியதாவது, "எனது சினிமா வாழ்க்கை எனக்கு சுலபமாக அமையவில்லை. அடிக்கடி உன்னை சிலர் காயப்படுத்தலாம்.சினிமா துறையில் நடிக்க, உன்னை நீயே பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும்.
என்னை போல் நீயும் கஷ்டபட வேண்டாம் அதை நான் விரும்பவும் இல்லை. மக்கள் நான் நடித்த 300வது படத்தையும் உன் முதல் படத்தையும் ஒப்பிடுவார்கள். இதையெல்லாம் நீ எப்படி சமாளிப்பாய்?" என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து பேசிய ஜான்வி "சினிமா வாழ்க்கை முட்கள் நிறைந்ததாக இருக்கும் என்பது தெரியும். ஆனால் நான் சினிமாவில் நடிக்காவிட்டால் எதையோ இழந்ததை போல் என் வாழ்க்கை சோகத்தில் ஆழ்ந்துவிடும்.
Recommended Video
எனது முதல் நான்கு படங்களையும், அம்மா நடித்த 300 படங்களையும் ரசிகர்கள் ஒப்பிட்டாலும் பரவாயில்லை. எனக்கு அதைப்பற்றி கவலையில்லை. ஆனால் நான் என் அம்மாவின் பெயரை காப்பாற்றவும் அவரை பெருமைப்படுத்தவும் நிச்சயம் சாதிப்பேன்." என்று கூறினார்.