»   »  ரஜினியும் கமலும் அரசியலுக்கு வரவேண்டும்; நல்ல மாற்றம் தரவேண்டும்! - ஸ்ரீப்ரியா

ரஜினியும் கமலும் அரசியலுக்கு வரவேண்டும்; நல்ல மாற்றம் தரவேண்டும்! - ஸ்ரீப்ரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டுக்கு நல்லதொரு மாற்றத்தைத் தர ரஜினிகாந்தும் கமல் ஹாஸனும் அரசியலுக்கு வரவேண்டும் என்று நடிகை ஸ்ரீப்ரியா கூறியுள்ளார்.

ரஜினி, கமலுடன் அதிகப் படங்களில் நடித்த ஹீரோயின்களில் ஒருவர் ஸ்ரீப்ரியா. இப்போது தயாரிப்பாளர், இயக்குநர் என செயல்பட்டு வரும் அவர், நட்சத்திர கிரிக்கெட் அணியையும் ஏலம் எடுத்து நடத்தி வருகிறார். அவ்வப்போது ட்விட்டரில் தனது அரசியல் கருத்துக்களையும் முன் வைக்கத் தவறுவதில்லை.

Sripriya welcomes Rajini, Kamal to politics

ரஜினிகாந்த், கமல் ஹாஸன் அரசியல் குறித்து சமீபத்தில் அவர் கூறுகையில், "ஒவ்வொரு சேனல்களிலும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவதை பற்றியே விவாதங்கள் நடத்தப்படுகின்றன. அவர்களால் ஏன் நல்லதொரு ஆக்கப்பூர்வமான மாற்றத்தை கொண்டு வர முடியாது? ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும்.. நல்ல மாற்றங்களைத் தரவேண்டும்.

Sripriya welcomes Rajini, Kamal to politics

மக்கள் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் பழக்கத்திலிருந்து முதலில் மாற வேண்டும். அதிலிருந்துதான் மாற்றம் தொடங்கும். ஓட்டை விற்றுவிட்ட பிறகு மோசமான அரசை கேள்வி கேட்கும் உரிமை வாக்காளருக்குப் போய்விடுகிறதே...," என்றார்.

English summary
Actress Sripriya is welcoming Rajini, Kamal to politics for good change

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil