என்ன சொல்றீங்க... அதே தேதியில் ஆர்.ஆர்.ஆர் ரீலிசா? மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

சென்னை : ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையடுத்து, இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி எந்த நேரத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி மாதமே திரைக்கு வர வேண்டிய இப்படம் கொரோனா காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாமல் தாமதம் ஆனது. இறுதியாக அக்டோபர் 13ந் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

எஸ்.எஸ்.ராஜமௌலி

எஸ்.எஸ்.ராஜமௌலி

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர் ஆர்.ஆர் திரைப்படத்திற்கு தமிழில், ரத்தம் ரணம் ரௌத்திரம் என பெயர் வைக்கப்ட்டுள்ளது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் இயக்கப்பட்டு வருகிறது.

வரலாற்று திரைப்படம்

வரலாற்று திரைப்படம்

சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை மையயமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. பெரும் வரலாற்றுத் திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

ஜூனியர் என்டிஆர்

ஜூனியர் என்டிஆர்

தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பல மொழிகளில்

பல மொழிகளில்

ஜனவரி மாதமே திரைக்கு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் கொரொனா 2வது அலையின் தீவிரத்தால் வெளியாவது தள்ளிப்போனது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்படத்தை ஆங்கிலம், போர்ச்சுகீஸ், கொரியா, ஸ்பானிஷ், துருக்கிய ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டப்பிங் பணிகள்

டப்பிங் பணிகள்

ஆர்.ஆர்.ஆர் படத்தின் இரண்டு பாடல் காட்சிகளைத் தவிர்த்து இதரக் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாகப் படக்குழு சமீபத்தில் கூறியிருந்தது. ராம் சரணும் ஜூனியர் என்.டி.ஆரும் இரண்டு மொழிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாகவும், விரைவில் இதர மொழிகளுக்கான டப்பிங்கையும் பேசி முடித்துவிடுவார்கள் எனவும் படக்குழு அறிவித்திருந்தது.

விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

இரண்ட பாடல் காட்சி படப்பிடிப்பு உக்ரைனில் நடைபெற்ற நிலையில் அங்கு படப்பிடிப்பு முடிவடைந்ததை இயக்குனர் ராஜமௌலி கேக் வெட்டி கொண்டாடினார். இதையடுத்து, படக்குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்துவிட்டது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இத்திரைப்படம், அக்டோபர் 13ந் தேதி தசரா பண்டிகையின் போது வெளியாகும் என் அறிவித்திருந்த நிலையில், கொரோனாவின் 3வது தொடங்கும் அபாயம் உள்ளதால் படத்தை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி எந்த நேரத்தலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

நட்பு பாடல்

நட்பு பாடல்

இந்த படத்தின் முதல் பாடலான நட்பு, நண்பர்கள் தினம் வெளியானது. நட்பை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த பாடலை ஐந்து மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் பாடியிருந்தனர். அதன்படி தமிழில் அனிருத்தும், மலையாளத்தில் விஜய் யேசுதாஸும், ஹிந்தியில் அமித் திரிவேதியும், தெலுங்கில் ஹேமச் சந்திராவும், கன்னடத்திலும் யசின் நசிரும் பாடியிருந்தனர். தமிழில் அனிருத் குரலில் இடம் பெற்ற பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X