Don't Miss!
- Finance
மீண்டும் இந்தியா.. டெஸ்லா-வுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் 3 மாநிலங்கள்..!
- News
பொது கழிப்பறைகளுக்குகு QR Code! சுத்தம் இல்லாமல் உள்ளதா? அப்ப உடனே நீங்க செய்ய வேண்டியது இது தான்!
- Lifestyle
கும்பத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தால் பிப்ரவரியில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகுது...
- Automobiles
விலை இவ்வளவு கம்மி தானா! ஆரா ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்திய ஹூண்டாய்!
- Technology
Vijay Sales Mega Republic Day sale: ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவிகளை கம்மி விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்.!
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
கடவுளை பார்த்துவிட்டேன்... ஸ்டீவ் ஸ்பீல்பெர்க்கை பார்த்து நெகிழ்ந்த ராஜமௌலி !
சென்னை : எஸ்.எஸ்.ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில் நான் கடவுளைப் பார்த்துவிட்டேன் என்று நெகிழ்ச்சிப்பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பாகுபலி என்ற மகத்தான வெற்றிப்படத்தை கொடுத்த எஸ்.எஸ். ராஜமௌலி, ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கி உலகை திரும்பி பார்க்க வைத்தார்.
இப்படத்தில் ராம் சரண்,ஜூனியர் என்டிஆர், அஜய் தேவன், ஆலியா பட், ஸ்ரேயா சரண் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ்,தெலுங்கு, இந்தி,மலையாளம், கன்னடம் என பான் இந்திய திரைப்படமாக வெளியான இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.
கோல்டன் க்ளோப் விருது.. ராஜமௌலி-கீரவாணிக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு!

ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர்
சுதந்திரத்துக்காகப் போராடிய இரண்டு நண்பர்களைப் பற்றிய கதை தான் ஆர்.ஆர்.ஆர். இதில், அல்லுரி சீதாராம ராஜு என்ற ரோலில் ராம்சரணும், கொமாரம் பீம் என்ற வேடத்தில் ஜூனியர் என்டிஆரும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் இருவருமே போட்டி போட்டுக்கொண்டு நடித்திருந்தனர். குறிப்பாக நாட்டுக்குத்து பாடலில் சளைக்காமல் ஆடி பட்டையை கிளப்பி விட்டார்கள்.

பாடல் உருவான விதம்
என்டிஆரும் ராம் சரணும் கை கோர்த்து ஆடும் அந்த ஸ்டெப்புக்கு மட்டும், 30 வகையாக ஸ்டெப் போடப்பட்டு 18 டேக்குகளில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீன் ஓகே என்று ராஜமௌலி சொன்ன பிறகும், மீண்டும் ஒன் மோர் கேட்டதாக என்டிஆர் பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார். அப்படி கடுமையான உழைப்பால் வெளியான இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

கோல்டன் குளோப் விருது
நாட்டுக்கூத்து பாடல், சிறந்த பாடல் பிரிவில் இந்தாண்டுக்கான கோல்டன் குளோப் விருது வென்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இந்த கோலாகல விழாவில், ஆர்.ஆர்.ஆர் நட்சத்திரங்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆகியோர் கலந்து கொண்டனர். கோல்டன் குளோப் விருதை இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக்கொண்டார்.

நான் கடவுளை சந்தித்தேன்
இந்தநிலையில் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது ட்விட்டர் பக்கத்தில், பிரபல ஹாலிவுட் திரைப்படத் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் எடுத்துக் கொண்ட படத்தை பகிர்ந்து, "நான் கடவுளை சந்தித்தேன்" என தலைப்பிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்த போட்டோவில், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியும் இருக்கிறார்.