»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் வீடு மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் அவருடையகுடும்பத்தினர் யாரும் காயமடையவில்லை.

கருணாநிதி கைதுக்குப் பிறகு, அதை ஆதரித்து கருத்துச் சொன்ன நடிகை விஜயசாந்தி வீடு மீது பெட்ரோல் குண்டுவீசப்பட்டது. இந்த நிலையில் தற்போது எஸ்.எஸ்.சந்திரன் வீடு மீதும் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

எஸ்.எஸ்.சந்திரனின் வீடு சென்னை சாலிகிராமம் பசும்பொன் முத்துராமலிங்கத் தெருவில் உள்ளது. இங்குவியாழக்கிழமை இரவு 9 மணியளவில் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவருடைய வீட்டு மீது சிலபெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு அவர்கள் தப்பியோடி விட்டனர்.

இந்த பெட்ரோல் குண்டுகள் வீட்டு போர்டிகோவில் விழுந்து தீப்பிடித்து எரிந்தன. வீட்டிற்குள் இருந்தஎஸ்.எஸ்.சந்திரனின் குடும்பத்தினர் வேகமாக வந்து தீயை அணைத்தனர். இதுதொடர்பாக சந்திரனின் மகன்போலிஸில் புகார் செய்தார். போலீஸார் விரைந்து வந்து பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்தனர்.

முதல்வர் ஜெ. கடும் கண்டனம்:

எஸ்.எஸ்.சந்திரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம்தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு பதற்றத்தை ஏற்படுத்த முயலும் திமுகவினர் மீதும்அவர்களுக்கு உதவியாக இருப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த தேர்தலில் எஸ்.எஸ். சந்திரன் அதிமுகவுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அவருக்கு அதிமுகவில் முக்கிய பதவி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டு வருகிறது.

இந் நிலையில் அவரது வீட்டில் தாக்குதல் நடந்துள்ளது.

இவர் முதலில் தீவரமான திமுக அனுதாபி. பின்னர் வைகோவை ஆதரித்தார். இப்போது அம்மாவின் தொண்டன்.

Read more about: chandran, chennai, cinema, residence, tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil